விடுதலைப் புலிகளைச் சொல்லி அதிமுகவினருக்கு ஜெ. எச்சரிக்கை
சென்னை:
தேர்தலின்போதும், தனது பிரச்சாரத்தின்போதும் தனக்கு கட்-அவுட் வைக்கக் கூடாது என அதிமுவினருக்குஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
கடந்த முறை ஆட்சி போக இந்த கட்-அவுட் கலாச்சாரமும் ஒரு காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அதிமுகவினருக்கு ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த நான்கு ஆண்டுகளாக என் வேண்டுகோளை ஏற்று பெரிய கட்-அவுட்களை வைக்காமல் இருந்த நீங்கள்,மீண்டும் இப்போது வைக்க ஆரம்பித்துவிட்டீர்கள். இதை மக்களும், நானும் விரும்பவில்லை. இதனால் இனிமேல்பெரிய கட்-அவுட் வைக்கக் கூடாது. படாடோபம் எனக்குப் பிடிக்காது.
தட்டிகளில் என் படத்தை ஒட்டினால் போதும். ராட்சத கட்-அவுட் எல்லாம் கூடாது. ஆடம்பரம், பெரிய கட்-அவுட்மூலம் நான் மக்களின் நன்மதிப்பை இழந்துவிட நேரும். அதனால் அது வேண்டாம்.
அதே போல நான் பிரச்சாரத்துக்கு வரும் வழியில் எல்லாம் பூங்கொத்துக்களுடன் நிற்க வேண்டாம். பாதுகாப்புஅதிகாரிகளுக்கு ஒத்துழைப்புத் தந்து பூங்கொத்துக்களை தருவதை தவிருங்கள்.
சமீபத்தில் பல இடங்களில் பூங்கொத்துக்கள், பூத் தொட்டிகளை கட்சியினர் என் காருக்குள் வீசியதில் என் தோளில்காயம் ஏற்பட்டது. காருக்குள் பூந்தொட்டிகளில் இருந்த சேறும் தண்ணீரும் விழுந்தது. என் மீது மண்ணும் சகதியும்விழுந்தது. எனது உடையும் காரும் அலங்கோலமாயின. இது தேவையா?
பூந்தொட்டிகளை ஏந்தி நீங்கள் நிற்கிறீர்கள். அவ்வாறு நிற்பதை வாய்ப்பாகக் கொண்டு தீவிரவாதிகள் மற்றும்விடுதலைப் புலிகள் உங்களைப் போலவே கரைவேட்டி கட்டிக் கொண்டு பூந்திதொட்டி ஏந்தி நிற்கக் கூடும்அல்லவா?
அவர்கள் பூத் தொட்டிக்குள் வெடிகுண்டு வைத்து, உங்களைப் போலவே காருக்குள் வீசினால் என்ன விளைவுஏற்படும் என்று சிந்தித்துப் பார்த்தீர்களா? எனக்கு புலிகளாலும் தீவிரவாதிகளாலும் ஆபத்து இருப்பதும் அதனால்கறுப்புப் பூனைப் படை பாதுகாப்பு இருப்பதும் உங்களுக்குத் தெரிந்தது தானே.
இதனால் பாதுகாப்பு ஊறு விளைவுக்கும் செயல்களில் ஈடுபடாதீர்கள்.
அதே போல என்னிடம் மனு தர விரும்பினாால் அதை ஒரு பேப்பரில் எழுதித் தந்தாலே போதும். பெரியபோல்டர்களாகவும் பைல்களாகவும் உங்கள் வாழ்க்கை வரலாற்றையே எழுதி காருக்குள் எறிகிறீர்கள். அதனாலும்என் உடலில் காயம் ஏற்படுகிறது.
உடன் பிறப்புக்களாகிய நீங்கள் இந்த வேண்டுகோள்களை அன்புக் கட்டளைகளாக ஏற்பீர்கள் என்று நான்உறுதியாக நம்புகிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications