பா.ஜ.க. வேட்பாளர்கள் நாளை மறுதினம் அறிவிப்பு
சென்னை:
அதிமுக போட்யிடும் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் 26ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
தமிழகத்தில் வட சென்னை, தர்மபுரி, நீலகிரி, கோவை, சிதம்பரம், நாகர்கோவில் மற்றும் பாண்டிச்சேரிதொகுதிகளை பா.ஜ.கவுக்கு அதிமுக ஒதுக்கியுள்ளது.
இதில் கோவையில் மாநில பா.ஜ.க. தலைவர் ராதாகிருஷ்ணன், நாகர்கோவிலில் மத்திய அமைச்சர்பொன்.ராதாகிருஷ்ணன், நீலகிரியில் இப்போதைய எம்.பி. மாஸ்டர் மாதன் ஆகியோர் போட்டியிடுவதுகிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
அதே போல பாண்டிச்சேரியில் லலிதா குமாரமங்கலம் என்பதும் உறுதியாகிவிட்டது.
நீலகிரியை மாதனுக்குத் தருவது குறித்து அதிமுகவுக்கு வருத்தம் இருந்தாலும், அந்தத் தொகுதியில்பெரும்பான்மையாக வசிக்கும் படுகர் இனத்தைச் சேர்ந்த வேறு எந்த பிரபலமும் பா.ஜ.கவில் இல்லை. இதனால்அவரையே நிறுத்த வேண்டிய நிலையில் பா.ஜ.க உள்ளது.
இந் நிலையில் பிற தொகுதிகளில் தான் யாரைப் போடுவது என்ற பெரும் குழப்பத்தில் பா.ஜ.க. உள்ளது. திருச்சிகிடைக்காததால் சுகுமாறன் நம்பியார் போட்டியிட மறுத்துவிட்டார். வட சென்னை என்பதால் இல.கணேசன்ஒதுங்கிவிட்டார். சிவகங்கை கிடைக்காததால் எச்.ராஜா போட்டியிடவில்லை.
இந் நிலையில் வேட்பாளர்கள் தேர்வு நடந்து கொண்டுள்ளது. வரும் 1ம் தேதி முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரத்தைத்தொடங்குவதால் அதற்குள் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் பா.ஜ.க. உள்ளது.
இதையடுத்து நாளை மறுநாள் தமிழக பா.ஜ.கவின் நிர்வாகிகள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில்கட்சியின் தலைவர் வெங்கைய்யா நாயுடுவும் பங்கேற்க உள்ளார். இதனால் இக் கூட்டத்திலேயே 7வேட்பாளர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுவிடும் என்று தெரிகிறது.
இல.கணேசனுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், ரிசர்வ் தொகுதியான சிதம்பரத்தில் முன்னாள் மாநிலத் தலைவரானகிருபாநிதியே நிறுத்தப்படலாம் என்று தெரிகிறது. ஏனெனில் அங்கு நிற்க வேறு எந்த தலித் தலைவரும் பா.ஜ.கவில்இல்லை.
ஆனால் வட சென்னை, தர்மபுரி தான் பா.ஜ.கவுக்கு பெரும் சவாலாக உள்ளது. இரு தொகுதிகளிலும்வேட்பாளர்களாக பா.ஜ.கவில் முக்கியஸ்தரே இல்லை. இதனால் குமரி அனந்தனின் மகளான டாக்டர் தமிழிசைவட சென்னையில் இறக்கிவிடப்படலாம்.
தர்மபுரியில் வேறு ஆளே இல்லாததால் பேசாமல் சுகுமாறன் நம்பியாரை நிறுத்திவிடலாமா என்றும்ஆலோசிகப்பட்டு வருகிறது. எப்படி இருந்தாலும் நாளை மறுதினம் பட்டியல் வெளியாகிவிடும்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications