20 ஈராக் குழந்தைகளுக்கு சென்னையில் இலவச இதய ஆபரேஷன்!
சென்னை:
ஈராக் நாட்டைச் சேர்ந்த 20 குழந்தைகளுக்கு சென்னையில் இலவச இதய அறுவைச் சிகிச்சை நடைபெறவுள்ளது.
சென்னை முகப்பேரில் உள்ள மெட்ராஸ் மிஷன் மருத்துவமனை வளாகத்தில் உள்ள சர்வதேச இதய நோய்கள்சிகிச்சை மையத்தில் இந்த அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. இவர்கள் 20 பேரும் பல்வேறு இதயநோய்களால் பாதிக்கப்பட்டவர்கள்.
பெரும்பாலான குழந்தைகள், இதயத்திலிருந்து நுரையீரலுக்கு ரத்தம் செல்வதில் பிரச்சினை உள்ளவர்கள்.இவர்களுக்கான சிகிச்சைக்கு நியூயார்க் நகரில் உள்ள கிறிஸ்தவ அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்து சென்னைக்குஅழைத்து வந்துள்ளது.
இந்தக் குழந்தைகளுடன் ஒரு டாக்டர், ஒரு நர்ஸ், ஒரு சமூக சேவகர் ஆகியோர் அடங்கிய குழுவும் சென்னைவந்துள்ளது. இது குறித்து மருத்துவமனையின் தலைவர் டாக்டர் கே.எம்.செரியன் கூறுகையில், மொத்தம் 48குழந்தைகளுக்கு இந்த நோய் பாதிப்பு உள்ளது. முதல் கட்டமாக 20 பேருக்கு அறுவைச் சிகிச்சைசெய்யவுள்ளோம்.
மார்ச் 1ம் தேதி முதல் இந்த அறுவைச் சிகிச்சைகள் தொடங்குகின்றன. தினசரி 2 குழந்தைகளுக்கு அறுவைச்சிகிச்சை செய்யப்படும். முற்றிலும் இலவசமாகவே இந்த அறுவைச் சிகிச்சைகளை செய்யவுள்ளோம் என்றார்.
மார்ச் 20ம் தேதி வாக்கில் இந்த 20 பேரும் சிகிச்சை முடிந்து ஈராக் திரும்பவுள்ளனர். அதன் பிறகு அமெக்கர்களின்குண்டு வீச்சிலிருந்து இவர்கள் தப்ப கடவுளைப் பிரார்த்திப்போம்!
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications