மதுரை உயர் நீதிமன்றத்திற்கு ரிட் அதிகாரம்: சுபாஷன் ரெட்டி கருத்து
மதுரை:
மதுரை உயர் நீதிமன்றக் கிளைக்கு ரிட் மனுக்களை விசாரிக்கும் அதிகாரம் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி கூறியுள்ளார்.
மதுரையில் அமைக்கப்பட்டுள்ள உயர் நீதிமன்றக் கிளையை சுபாஷன் ரெட்டி சுற்றிப் பார்த்தார். பின்னர்செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஏப்ரல் 13ம் தேதி மதுரையில் உயர் நீதிமன்றக் கிளை திறக்கப்படும். 15ம்தேதி முதல் நீதிமன்றம் செயல்படத் தொடங்கும்.
நீதிமன்றத்தில் 7 நீதிபதிகள் இருப்பார்கள். தலா 2 நீதிபதிகள் கொண்ட இரண்டு டிவிஷன் பெஞ்சுகளும், 3 தனிநீதிபதிகளும் இதில் அடங்குவர்.
மதுரையில் அமைந்துள்ள உயர் நீதிமன்றக் கிளையின் நடவடிக்கைகள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே இருக்கும்.
உயர் நீதிமன்றக் கிளையில், சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் முதல் கட்டமாக விசாரிக்கப்படும். ரிட்மனுக்களை விசாரிக்கும் அதிகாரம் குறித்து பரிசீலிக்கப்படும்.
வணிக வரி தீர்ப்பாயம் உள்ளிட்ட பல்வேறு தீர்ப்பாயங்களை மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் அமைக்குமாறுகோரிக்கை வந்தால் அதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்றார் அவர்.
மதுரை வழக்கறிஞர்கள் கோரிக்கை
இந் நிலையில், மதுரையில் உயர் நீதிமன்றக் கிளை வழக்கறிஞர்கள் சங்கத்தின் கூட்டம் நடந்தது. கூட்டத்தில்பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மதுரை உயர் நீதிமன்றக் கிளைக்கு ரிட் மனுக்களை விசாரிக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். ரிட்மனுக்களை விசாரிக்கும் அதிகாரம் இல்லாவிட்டால் உயர் நீதிமன்றக் கிளை தலையில்லாத முண்டமாகவேஇருக்கும்.
மேலும், திருவாரூர், தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களையும் மதுரை கிளையின் அதிகார வரம்புக்குக் கீழ் கொண்டுவர வேண்டும்.
அதேபோல, பல்வேறு நிர்வாகத் தீர்ப்பாயங்கள் தற்போது சென்னையில்தான் உள்ளன. அவற்றையும் மதுரையில்தொடங்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications