இலங்கையில் ஈ.பி.டி.பி. தொண்டர் சுட்டுக் கொலை
கொழும்பு:
இலங்கையில் ஈழ மக்கள் விடுதலைக் கட்சியின் தொண்டர் இன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதன்மூலம் இலங்கை மக்களவைத் தேர்தல் தொடர்பான வன்முறையில் பலியான தமிழர்களின் எண்ணிக்கைஇரண்டாக உயர்ந்துள்ளது.
பிரதமர் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் மட்டக்களப்பில் தேர்தலில் போட்டியிட்ட சின்னதம்பிசுந்தரபிள்ளை நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு அமெரிக்காவிடம் இருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இந்தக் கொலைக்கு புலிகளைக் குற்றம் சாட்டியுள்ள அமெரிக்கா, புலிகள் அமைப்பு தீவிரவாத அமைப்பு போலசெயல்படுவதாகக் கூறியுள்ளது.
இந் நிலையில் நேற்றிரவு மட்டக்களப்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த அக்கட்சியின் தொண்டரான பொன்னையா யோகேந்திரன் (28) சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தக் கொலையை விடுதலைப் புலிகள் தான் செய்ததாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் எதிரிகளை கொன்று குவித்துவிட்டு தமிழ் மக்களின் ஒரேபிரதிநிதியாக வன்முறை மூலம் அங்கீகாரம் பெற புலிகள் இயக்கம் முயல்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்த இரு கொலைகளுக்கும் புலிகளோ அல்லது வேறு இயக்கமோ இதுவரை பொறுப்பேற்கவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications