விவாகரத்து கோரும் சுகன்யா
சென்னை:
நடிகை சுகன்யா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் படியேறி உள்ளார்.
நேற்று கல்யாணம், இன்று விவாகரத்து, நாளை மீண்டும் ஷூட்டிங் என்ற வேகத்தில் தமிழ் சினிமா நடிகைகளும்,நடிகர்களும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
சீதா-பார்த்திபன், ரோகிணி-ரகுவரன், கமல்-சரிகா, ரேவதி-சுரேஷ் மேனன் (இது ஜோதிடர் யோசனைப்படி நடந்தநாடகப் பிரிவு என்கிறார்கள்) என சமீப காலமாக பிரியும் ஜோடிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேவருகிறது. இந்த வரிசையில் தற்போது சுகன்யாவும் சேர்ந்துள்ளார்.
சமீபகாலமாகவே சுகன்யாவுக்கும் கணவருக்கும் ஒத்து வரவில்லை என்பதையும், அவர் தனியே பிரிந்து வந்துபெற்றோருடன் வசித்து வருவதையும் நாம் ஏற்கனவே சொல்லியிருந்தோம். மேலும் அவரது கணவர் குடும்பத்தைமாஜி அமைச்சரின் ஆட்கள் மிரட்டுவதாகவும் தகவல்கள் வந்தன.
குடைமிளகாய் மூக்குடன் புதுநெல்லு புது நாத்து படத்தில் அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே ரசிகர்களைகொள்ளை கொண்ட கலாஷேத்ரா மாணவி சுகன்யா. தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்த சுகன்யாகமல்ஹாசனுடன் மகாநிதி, இந்தியன் ஆகிய படங்களிலும் நடித்தார்.
விஜயகாந்த்துடன் சின்னக் கவுண்டர், சத்யராஜுடன் வால்டர் வெற்றிவேல் ஆகிய படங்கள் அவருக்குப் பெயரைவாங்கித் தந்தன. திரையுலகில் கொடி கட்டிப் பறந்தபோது, முன்னாள் அமைச்சர் கண்ணப்பனுடன்கிசுகிசுக்கப்பட்டார்.
இந் நிலையில், வாய்ப்புக்கள் குறையவே சென்னையைச் சேர்ந்த ஸ்ரீதர் என்ற பொறியாளரைக் கல்யாணம் செய்துகொண்ட சுகன்யா அமெக்காவுக்குச் சென்று விட்டார். ஆனால் திடீரென்று அங்கிருந்து திரும்பி சென்னைக்குவந்தார்.
டிவி தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். டிவியில் நடன நிகழ்ச்சி நடத்த ஆரம்பித்தார். இந் நிலையில் அவரதுகணவரை விலகிப் போகச் சொல்லி மாஜி அமைச்சர் ஒருவரின் ஆட்கள் மிரட்டுவதாக தகவல்கள் வந்தன.
இந் நிலையில் தற்போது விவாகரத்து கோரி குடும்ப நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் சுகன்யா.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி












Click it and Unblock the Notifications