செட் டாப் பாக்ஸ் திட்டம் தொடரலாம்: உயர் நீதிமன்றம்
சென்னை:
செட் டாப் பாக்ஸ் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.
விரும்பிய கட்டண தொலைக்காட்சி அலைவசைகளை செட் டாப் பாக்ஸ் கருவி மூ லம் கட்டணம் செலுத்திப்பார்க்கும் திட்டம் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் சென்னைநகரில் மட்டுமே முழுமையாக அமல்படுத்தப்பட்டது.
செட் டாப் பாக்ஸ் திட்டம் காரணமாக சென்னையில் ரூ. 500 வரை கேபிள் டிவிக்காக செலவு செய்து வந்தவர்கள்மாதம் ரூ. 100 வரை மட்டுமே செலுத்தும் வசதி ஏற்பட்டது. இருப்பினும் கட்டணச் சேனல்களாக இருந்து வரும்பல்வேறு இந்தி மொழி சோனல்களும், தேவையில்லாத பல்வேறு சேனல்களையும் மக்கள் நிராகரிக்கும் நிலைஏற்பட்டது.
இந்தச் சூழ்நிலையில் செட் டாப் பாக்ஸ் திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இதனால்பணம் கட்டி செட் டாப் பாக்ஸ் கருவியை வாங்கியவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து செட் டாப் பாக்ஸ்உபயோகிப்பாளர்கள் ஒன்று சேர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
தங்களது மனுவில், செட் டாப் பாக்ஸ் திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால்ஆயிரக்கணக்கான ரூபாய் கட்டி செட் டாப் பாக்ஸ் வாங்கியவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் நிலைஏற்பட்டுள்ளது. மேலும் கேபிள் டிவிக்கு மாதந்தோறும் அதிக அளவில் கட்டணம் கட்டும் சூழ்நிலை மறுபடியும்ஏற்படும்.
எனவே செட் டாப் பாக்ஸ் திட்டத்தை ரத்து செய்ததற்கு தடை விதிக்க மனுவில் கோரியிருந்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி ரவிராஜ பாண்டியன், மத்திய அரசு செட் டாப் பாக்ஸ் திட்டத்தை ரத்து செய்ததற்குஇடைக்காலத் தடை விதித்தார். இந்தத் திட்டம் சென்னை நகரில் தொடரலாம் என்றும் அவர் உத்தரவிட்டார்.
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு












Click it and Unblock the Notifications