காங். வேட்பாளர்கள் பட்டியல் ரெடி: சிதம்பரத்துக்கு சீட் இல்லை
டெல்லி:
தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் இறுதி செய்யப்பட்டுவிட்டனர்.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ப.சிதம்பரத்துக்கு சிவகங்கை தொகுதி தரப்பட மாட்டாது என டெல்லி வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.
வேட்பாளர் ஆய்வையொட்டி தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் டெல்லியில் தங்கியுள்ளார். திண்டுக்கல்,சிவகங்கை, சேலம், பழனி, திருநெல்வேலி ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில்குழப்பம் நிலவி வந்தது.
சிவகங்கையைப் பொருத்தமட்டில், ப.சிதம்பரத்திற்கு ஒதுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,தேர்தலுக்குப் பிறகு கட்சியை காங்கிரஸுடன் இணைக்க வேண்டும் என்று அவருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி நிபந்தனை விதித்துள்ளார். இதை சிதம்பரம் ஏற்றால் கடைசி நேரத்தில் தொகுதி ஒதுக்கப்படலாம்என்கின்றனர்.
இப்போது இறுதியாகியுள்ள பட்டியல் விவரம்:
திண்டுக்கல்- சித்தன்
மயிலாடுதுறை- மணிசங்கர் அய்யர்
சேலம்- தங்கபாலு
ராசிபுரம்-நடேசன்
கோபிச்செட்டிப்பாளையம்- இளங்கோவன்
நீலகிரி- பிரபு
பெரியகுளம்- லாட்டரி அதிபர் ஆருண்
திருநெல்வேலி- தனஷ்கோடி ஆதித்தன்
பழனி- கார்வேந்தன்
சிவகங்கை- சுதர்சன நாச்சியப்பன்
இந்தப் பட்டியல் 2 நாட்களில் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications