ஜெவுக்கு எதிராக அவமதிப்பு வழக்கு: இளங்கோவன்
சென்னை:
தமிழக அரசு தொடர்ந்துள்ள அவதூறு வழக்கு விசாரணை தொடர்பாக முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர்இளங்கோவன் இன்று சென்னை 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
தமிழகத்தில் ஜனநாயகத்தின் குரல் வளை நெரிக்கப்படுவதாக இளங்கோவன் பேசியது முதல்வர் ஜெயலலிதாவின்புகழுக்கு களங்கம் விளைவித்துவிட்டதாகக் கூறி அவர் மீது அரசு வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதையொட்டி இளங்கோவன் நீதிமன்றத்தில் ஆஜரானார்.இதையடுத்து நீதிபதி ராமலிங்கம் விசாரணையை ஜூன் 3ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
வெளியே வந்த இளங்கோவன் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக அரசு ஜனநாயக முறைப்படிசெயல்படவில்லை என்று கூறியதற்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல, இன்னும் எத்தனைவழக்குகள் போட்டாலும் அதை சந்திக்கத் தயாராக இருக்கிறேன்.
சோனியா காந்தி இந்தியப் பிரஜை தான் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்ட பிறகு அவர் மீது சேற்றைஅள்ள வீசி வருகிறார் ஜெயலலிதா. இது நீதிமன்ற அவமதிப்பாகும். எனவே ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்குதாக்கல் செய்வேன். என்றார்.
இளங்கோவன் மீது இதுவரை மொத்தம் 16 அவதூறு வழக்குகளை தமிழக அரசு போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications