ஜெ. பிரசாரம் துவக்கம்
சென்னை:
அதிமுக மற்றும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா இன்று முதல் தனது 2 மாத பிரச்சாரத்தைசென்னையிலிருந்து தொடங்குகிறார். கடற்கரைச் சாலையில் அவர் பிரசாரம் தொடங்குவதையொட்டி மெரீனாகடற்கரையில் அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
இன்று மாலை ஜெயலலிதாவின் பிரச்சாரம் தொடங்குகிறது. இன்று காலை முதலே அப்பகுதியில் அதிமுகவினர்குவிந்து வருகின்றனர். அவர்களை குஷிப்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலைநிகழ்ச்சிகள், பாட்டுக் கச்சேரிகள் என அப்பகுதியே களை கட்டியுள்ளது.
பிரசாரம் தொடங்கும் பெசன்ட் சாலை, கடற்கரைச் சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள மேடை அருகேஅதிமுகவினர் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அங்கு போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல, மெரீனா கடற்கரை சாலையான காமராஜர் சாலை முழுவதிலும் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.மோப்ப நாய்கள் மூலம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இங்கு பிரசாரத்தைத் தொடங்கும் ஜெயலலிதா, மத்தியசென்னை வேட்பாளர் பாலகங்கா, தென் சென்னை வேட்பாளர் பாதர் சையத் ஆகியோரை ஆதரித்துப் பிரசாரம்செய்கிறார்.
இதையடுத்து நொச்சிக்குப்பம், சத்யா ஸ்டுடியோ, மத்திய கைலாஷ், ஹால்டா, கிண்டி ரயில் நிலையம் ஆகியஇடங்களில் அவருக்கு அதிமுகவினர் சிறப்பான வரவேற்பு கொடுக்கிறார்கள். சென்னையில் தனது பிரச்சாரத்தைமுடித்துக் கொண்டு மதுராந்தகம் செல்கிறார் ஜெயலலிதா. அங்கு அதிமுக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்நடக்கிறது.
நாளை சென்னையில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை ஆகியஇடங்களில் பிரச்சாரம் செய்து விட்டு வேலூர் செல்கிறார்.
வரவேற்க தயாராகும் வேலூர்:
வேலூர் நகரில் பிரச்சாரம் செய்ய வருகை தரவுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்கமாவட்ட அதிமுகவினர் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
வேலூர் நகரில் எங்கு பார்த்தாலும் ஜெயலலிதாவின் போஸ்டர்கள், பேனர்கள், கட் அவுட்களாக காணப்படுகிறது.இத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் பையூர் சந்தானத்தை ஆதரித்து வேலூர், கோட்டை மைதானத்தில் பொதுக்கூட்டத்திலும் பேசவுள்ளார் ஜெயலலிதா.
ஜெயலலிதா வருகையொட்டி வேலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications