புதுவையில் போட்டியில்லை: காங். அறிவிப்பு- பாமக பயம் கலந்த மகிழ்ச்சி
பாண்டிச்சேரி:
புதுவைத் தொகுதியில் தனியாக வேட்பாளர்களை நிறுத்திப் போட்டியிடப் போவதில்லை என்று காங்கிரஸ்தலைமை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் கபில் சிபல் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலங்களவைத்தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை திமுக மற்றும் பா.ம.க. ஆதரிக்கும் என்று வாக்களித்துள்ளதால்புதுவையில் போட்டி வேட்பாளரை நிறுத்துவதில்லை என்று காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது.
புதுவையை பா.ம.கவுக்கு திமுக ஒதுக்கியது சரியல்ல என்று காங்கிரஸ் கருதினாலும், கூட்டணி ஒற்றுமை, தேர்தல்வெற்றி ஆகியவற்றை மனதில் கொண்டு கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது என்று கூறியுள்ளார்.
புதுவை தொகுதியால் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் நிலவி வந்த கருத்து வேறுபாடு காங்கிரஸ் கட்சியின்இந்த அறிவிப்பால் முடிவுக்கு வந்தது.
முடிவை ஏற்ற காங். தலைவர்கள்
பாண்டிச்சேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடாது என்று கட்சியின் மேலிடம் அறிவித்துள்ளதை ஏற்றுக்கொள்வதாக புதுவை பிரதேச காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் மேலிட முடிவு தங்களுக்குஏமாற்றம் தருவதாகவும் அவர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
புதுவை தொகுதியை பா.ம.கவுக்கு திமுக கொடுத்ததால் புதுவை பிரதேச காங்கிரஸார் கடும் அதிருப்திக்குஆளானார்கள். புதுவையில் காங்கிரஸ்தான் போட்டியிட வேண்டும், பா.ம.கவை நாங்கள் ஆதரிக்க மாட்டோம்என்று அவர்கள் கூறி வந்தனர்.
ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில், புதுவையில் கூட்டணி வேட்பாளரின் வெற்றிக்காக காங்கிரஸ்பாடுபடும், அங்கு காங்கிரஸ் தனது வேட்பாளரை நிறுத்தாது என்று காங்கிரஸ் மேலிட செய்தித் தொடர்பாளர் கபில்சிபல் அறிவித்து விட்டார்.
இது குறித்து புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி கூறுகையில், இந்தத் தொகுதியை திமுகபா.ம.கவுக்கு ஒதுக்கியதையடுத்து, புதுவையை காங்கிரஸுக்கே பெற்றுத் தருமாறு கோரி கமல்நாத் முதல் பல்வேறுதலைவர்களை நேரில் சந்தித்துக் கோரிக்கை விடுத்தோம்.
ஆனால், தற்போது பா.ம.கவுக்கு ஆதரவு அளிக்கப் போவதாக கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. கட்சி மேலிடமுடிவை நாங்கள் மீற முடியாது. எனவே இதை ஏற்கிறோம் என்றார்.
பா.ம.கவுக்கு சீட் கொடுத்ததை எதிர்த்து கூண்டோடு விலகப் போவதாக மிரட்டிய மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகளும்,கட்சி மேலிட முடிவை ஏற்பதாக தற்போது பல்டி அடித்துள்ளனர். மகளிர் காங்கிரஸ் தலைவர் ஜீன் பூரணிகூறுகையில், இது எங்களுக்கு அதிர்ச்சியாகத்தான் உள்ளது. ஆனால் கட்சி மேலிட முடிவை மீற முடியாதே?என்றார்.
அதேபோல, இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே.பாண்டியன், அகில இந்திய காங்கிரஸ் காரியக் கமிட்டிஉறுப்பினரும், "புரட்சித் தலைவருமான" ப.கண்ணன் ஆகியோரும் கட்சி மேலிட முடிவை ஏற்பதாகத்தெரிவித்துள்ளனர்.
பா.ம.க பயம் கலந்த மகிழ்ச்சி:
மொத்தத்தில் புதுவை காங்கிரஸுக்கு மீண்டும் கிடைக்காவிட்டால் அப்படி நடக்கும், இப்படி நடக்கும் என்றுமிரட்டலாக விடுத்து வந்த புதுவை காங்கிரஸ் தலைவர்கள் இப்போது "கப் சிப் " நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கு நேர் மாறாக பா.ம.க. வட்டாரத்தில் பெரும் உற்சாகம் காணப்படுகிறது. மேலிட முடிவை ஏற்பதாகஅறிவித்திருந்தாலும் கூட, புதுவை பகுதி காங்கிரஸ் தலைவர்கள் யாருமே முழு மனதுடன் இதை அறிவித்ததாகக்கூற முடியாது.
எனவே "உள்ளடி" வேலைகள் மூலம் பா.ம.கவை கவிழ்க்க இனி அவர்கள் கடுமையாக "பிரச்சாரம்" செய்வார்கள்என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications