தமிழகத்தில் இந்த ஆண்டும் கடும் வெயில் கொளுத்தும்: வானிலை மையம்
சென்னை:
தென்மேற்குப் பருவ மழையும், வட கிழக்குப் பருவ மழையும் எதிர்பார்த்த அளவு பெய்யாததால் கடந்தஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் வெயில் கொடுமை அதிமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதை உறுதிப்படுத்துவது போல், மார்ச் தொடக்கத்திலேயே 90 டிகிரியைத் தாண்டி வெயில் கொளுத்துகிறது.கடந்த ஆண்டு மார்ச் மாதம் 6ம் தேதி நுங்கம்பாக்கத்தில் 91.4 டிகிரி வெப்பம் பதிவாகியிருந்தது. ஆனால் இந்தஆண்டு அதைவிட அதிகமாக 92.14 டிகிரி வெப்பம் கடந்த 4ம் தேதியே பதிவாகிவிட்டது. அதே நாளில்மீனம்பாக்கத்தில் 93.38 டிகிரி பதிவாகியுள்ளது.
தற்போது இயல்பாக இருக்கவேண்டிய வெப்ப அளவை விட, அதிகமாகவே மதுரை, கோயம்புத்தூர், சேலம்,கொடைக்கானல், வேலூர் ஆகிய இடங்களில் வெப்பம் பதிவாகி வருகிறது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரி கூறுகையில்,
கடந்த ஆண்டு மே மாதம் சென்னையில் அதிகபட்சமாக 113 டிகிரி பதிவானது. இந்த ஆண்டும் கடந்த ஆண்டைப்போலவே வெயில் அதிகமாகவே இருக்கும். கோடை காலத்தில் வெப்பம் அதிகமாக இருந்து காற்றில் ஈரப்பதம்இருந்தால் சாதகமான சூழ்நிலையில் இடியுடன் மழை பெய்யும்.
கோடை காலங்களில் கடந்த ஆண்டுகளில் மழை பெய்துள்ளது. இந்த ஆண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.ஆனால் எதிர்பார்த்த அளவு பெய்யுமா என்பது கேள்விக்குறிதான் என்று கூறியுள்ளார்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications