"தேர்தல் சாலை"யை எதிர்த்து சென்னையில் மக்கள் போராட்டம்
சென்னை:
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ஜல்லிக் கல் கூட இல்லாமல் வெறும் தாரை மட்டும் பயன்படுத்திப் போடப்பட்டதரமற்ற சாலையை எதிர்த்து சென்னையில் பொது மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பல சாலைகள் கடந்த புயல், மழையின்போது கடுமையாகபாதிக்கப்பட்டன. குண்டும் குழியுமாக நகர சாலைகள் பல மோசமாக காணப்படுகின்றன.
இந்த சாலைகளை சீரமைக்கக் கோரி சென்னை மக்கள் பலவகையான போராட்டங்கள் நடத்தியும் அரசும்,மாநகராட்சியும் கண்டு கொள்ளவில்லை. இந் நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால்,சென்னைநகரின் பல பகுதிகளில் சாலைகள் போடும் பணியில் அரசு மும்முரமாகியுள்ளது.
இரவில் மட்டுமே இந்த தேர்தல் சாலைகள் போடப்பட்டு வருகின்றன. தரமே இல்லாமல் அவசர கோலத்தில்போடப்படும் இந்த சாலைகளால் எந்தவித பலனும் இல்லை என்று சென்னைவாசிகள் முணுமுணுத்து வருகிறார்கள்.
இந் நிலையில் அயனாவரம் பகுதியில் ஒரு தெருவில் போடப்பட்ட சாலையை எதிர்த்துஅப்பகுதி மக்கள்அதிகாரிகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். சாலைகளின் உயிரான ஜல்லிக் கற்கள் கூட இல்லாமல்வெறும் தாரை மட்டும் தரையில் ஊற்றி இந்த சாலைகள் போடப்பட்டன. அதிலும், நள்ளிரவில் ஊரே உறங்கியபின்னர் அதிகாரிகள் இந்த சாலையை போடும் பணியில் ஈடுபட்டனர்.
பல காலமாக சாலை கோரி போராட்டம் நடத்திய போதெல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டு ஓட்டுவாங்குவதற்காக அவசர கோலத்தில் போடப்பட்ட இந்த சாலை எங்களுக்கு வேண்டாம் என்று கூறி சாலைப்பணியை மேற்பார்வையிட்ட அதிகாரிகளை இப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தி சாலை தரமான முறையில் போடப்படும் என்று உறுதியளித்தனர்.இருப்பினும் பொதுமக்கள் தொடர்ந்து உறுதியாக இருந்ததால், சாலை போடும் பணி பாதியில் விடப்பட்டது.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications