திடீரென நினைவுக்கு வந்த வள்ளுவர், அண்ணா, காமராஜர்
கன்னியாகுமரி:
தமிழக திராவிட இயக்கத் தூண்களில் ஒருவரான அண்ணாதுரையைப் பற்றி இதுவரை, எந்தக் காலத்திலும் பேசாதபா.ஜ.கவுக்கு திடீரென அவரது நினைவும் எம்.ஜி.ஆரின் நினைவும் வந்துள்ளது.
கன்னியாகுமரியில் தனது இந்தியா ஒளிர்கிறது யாத்திரையை இன்று தொடங்கிய அத்வானி கூறியதாவது:
அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோரின் பாரம்பாரியத்தில் வழி வந்தவர் முதல்வர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர்.மக்களைக் கவர்ந்த தலைவர் மட்டுமல்ல. அவர் தமிழ் மண்ணின் மைந்தர். அண்ணா, எம்.ஜி.ஆருக்குப் பின்ஜெயலலிதா இன்று மிகச் சிறப்பான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். ஜெயலலிதா இன்று எங்களுடன்கூட்டணி அமைத்துள்ளது பெரும் மகிழ்ச்சி தருகிறது.
இங்குள்ள விவேகானந்தர் மண்டபத்திலும், தெய்வப் புலவர் திருவள்ளுவரின் சிலைக்கும் புகழஞ்சலிசெலுத்திவிட்டுத் தான் நான் இங்கு வந்திருக்கிறேன்.
50 ஆண்டு காலம் ஆட்சி நடத்திய காங்கிரஸ் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல தவறிவிட்டது.அதே நேரத்தில் வாஜ்பாயின் ஆட்சியின் கீழ் கடந்த ஆறே ஆண்டுகளில் இந்தியா மாபெரும் வளர்ச்சிகண்டுள்ளது.
இந்தியாவை காங்கிரஸ் திட்டமிட்டே சீரழித்தது. 1988ம் ஆண்டு முதல் 1998ம் ஆண்டு வரை இந்த நாடு 7பிரதமர்களைக் கண்டது. இதனால் ஸ்திரத்தன்மையை இழந்து நாடு இருண்டு கிடந்தது.
ஆனால், இந்தியாவை வாஜ்பாய் மீட்டெடுத்தார். இப்போது இந்தியாவின் நல்ல நேரம் ஆரம்பித்துவிட்டது.நாட்டை செல்வச் செழிப்புக்கும் வளர்ச்சியடைந்த நாடு என்ற நிலைக்குக் கொண்டு செல்லவும்ஆரம்பித்துவிட்டோம்.
இதை இந்தியர்கள் மட்டுமல்ல வெளிநாட்டினரும் உணர ஆரம்பித்துவிட்டனர். 21ம் நூற்றாண்டு இந்தியாவுக்கேசொந்தமானது. பாகிஸ்தானுடனான அமைதி முயற்சிகள் மூலம் வரலாற்றை உருவாக்கியுள்ளோம். அதே நேரத்தில்எல்லையில் கண்காணிப்பை எந்தக் காரணத்துக்காகவும் குறைக்க மாட்டோம்.
எனது இந்த 8,000 கி.மீ. உற்சாக யாத்திரை மூலம் மக்களுக்கு நல்ல செய்தியைத் தரப் போகிறேன். வாஜ்பாயின்தலைமையில் மீண்டும் அரசு அமைய வாய்ப்பு கேட்கப் போகிறேன். இந்த யாத்திரைக்கு உரிய பாதுகாப்பைமத்திய பாதுகாப்பு அமைப்புகளும் மாநில அரசுகளும் வழங்கும் என்றார் அத்வானி.
உடனிருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த். இந்தியா இப்போது எல்லாத்துறைகளிலும்ஒளிர்கிறது. கிரிக்கெட்டிலும் கூட ஒளிர்கிறது என்றார்.
யாத்திரையை கொடி அசைத்துத் துவக்கி வைத்த பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு கூறுகையில், முன்புசங்கராச்சாரியார்கள் மேற்கொண்டதைப் போல அத்வானி இப்போது மக்களைச் சந்திக்க யாத்திரைகிளம்பியுள்ளார் என்றார்.
கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு வழியில் நாகர்கோவிலில் பொதுக் கூட்டத்தில் அத்வானி பேசுகையில்,
இந்தியாவில் பிறக்காததால் சோனியாகாந்திக்கு இந்தியாவே புரியவில்லை. நான் தான் பிரதமர் பதவிக்குகாங்கிரஸ் சார்பில் போட்யிடிடுகிறேன் என்பதைக் கூட சோனியாவால் வெளிப்படையாக சொல்ல முடியவில்லை.
இந்த நாகர்கோவில் மண் தான் மாபெரும் காங்கிரஸ் தலைவர் காமராஜரை மக்களவைக்கு அனுப்பி வைத்தது.அவரது மண்ணில் இந்தமுறையும் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணனை மக்கள் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றார்.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications