பிரபாகரன் போருக்கு தயாராவதாக கருணா குற்றச்சாட்டு
கொழும்பு:
அமைதி ஒப்பந்தம் அமலில் இருந்தாலும் போருக்கு பிரபாகரன் தயாராகி வருவதாக புலிகள் இயக்கத்தில் இருந்துநீக்கப்பட்ட கருணா கூறியுள்ளார்.
மட்டக்களப்புக்கு அருகே உள்ள கரடியனாறு என்ற இடத்தில் பி.பி.சிக்கு அவர் அளித்த பேட்டி விவரம்:
போருக்கு பிரபாகரன் தயாராவதால் தான் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பை நான் துண்டித்தேன்.வன்னியில் உள்ள புலிகளின் தலைமையகம் என்னிடம் 1,000 வீரர்களை அனுப்புமாறு கோரியது.
அமைதி உடன்படிக்கை அமலில் இருக்கையில் வீரர்களை அனுப்பச் சொல்வது ஏன்?. வரும் ஏப்ரலில் நடக்கவுள்ளநாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகளைப் பொறுத்து மீண்டும் போருக்கு பிரபாகரன் தயாராவதாக நினைக்கிறேன்.
மேலும் தங்களது பாதுகாப்புக்கு எங்களது படைகளை பயன்படுத்தவும் புலிகளின் தலைமைகம் நினைக்கிறது.
புலிகள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் இங்குள்ள என் பகுதி மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பில்நான் இருக்கிறேன். இதை தலைமையில் நான் சொல்லிப் பார்த்தேன். ஆனால், அவர்கள் என்னை பெரிதாகஎடுத்துக் கொள்ளவில்லை.
எனது செயல்களால் நான் புலிகள் இயக்கத்துக்கு சதி செய்துவிட்டதாக நினைக்கவில்லை. இனியும் போரில்ஈடுபடுவதை நான் விரும்பவில்லை. இதுவரை நாம் இழந்த உயிர்களுக்கு அர்த்தம் இருக்க வேண்டும் என்றுநினைக்கிறேன். இதனால் போரை இனியும் நான் விரும்பவில்லை.
எனது தலைமையிலான பிரிவு வெளியேறிவிட்டதால் பிரபாகரனின் படை பலம் சரிந்துள்ளது. இதனால், பலரும்பயப்படும்படி எங்கள் இரு குழுக்களுக்கு இடையே மோதல் ஏதும் வராது. எங்கள் சகோதரர்களைக் கொல்லநாங்கள் தயாராக இல்லை.
அதே நேரத்தில் எங்கள் மக்களையும் வீரர்களையும் காக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உண்டு. இதனால்வன்னி நிர்வாகம் (பிரபாகரன்) எங்களுடனான மோதலைத் தவிர்ப்பது நல்லது.
இவ்வாறு பிபிசி செய்தியாளரிடம் கருணா கூறியுள்ளார்.
புலிகளுடன் பிரிட்டிஷ் தூதர் சந்திப்பு:
இதற்கிடையே புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனை இலங்கைக்கான பிரிட்டிஷ் தூதர் ஸ்டீவன்இவான்ஸ் இன்று கிளிநொச்சியில் சந்தித்துப் பேசினார்.
அப்போது மட்டக்களப்பு-அம்பாறையில் நிலவும் அரசியல், பாதுகாப்பு நிலவரம் குறித்து இவானிசிடம்தமிழ்ச்செல்வன் விளக்கினார். நாடாளுமன்றத் தேர்தலை அமைதியாக நடத்த அனைத்து வகைகளிலும்உதவுவதாகவும் இவானசிடம் புலிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications