ஜெ.வின் கனவை தகர்த்தெறிவோம்: வைகோ ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பிரதமர் வாஜ்பாயின் புகழை முன்னிருத்தி, தேர்தலில் வெற்றி பெறலாம் என்ற முதல்வர் ஜெயலலிதாவின் கனவைதகர்த்தெறிவோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பங்கு பெற்றதற்காக வருந்துகிறேன். எனது கட்சியினரின் வற்புறுத்தலினாலேயேஅத்தகைய முடிவை எடுக்க நேர்ந்தது. அதற்காக கட்சியின் அடிப்படைக் கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ளவேண்டி வந்தது.

மத்திய அரசில் பங்கு கொள்ளாமல் இருந்திருந்தால், பொடா சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருக்க மாட்டேன்.தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து நாங்கள் விலகியதற்கு பொடா மட்டுமே காரணமல்ல. அப்படிக் கூறுவது,சிறையில் என்னைத் தள்ளியதற்காக, கூட்டணியை விட்டு வெளியேறியதாக தவறான அபிப்பிராயம் பரவஏதுவாகும்.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் என்னைச் சந்திக்க 3 முறை வேலூர் சிறை வந்தார்.அப்போதெல்லாம் அவரிடம், என் மீதான பொடா வழக்கை நீதிமன்றத்தின் மூலமே சந்திப்பேன் என்றுதான்கூறியிருக்கிறேன்.

வாஜ்பாய் சிறந்த தலைவர்தான். ஆனால் அவரைச் சுற்றியுள்ள தீய சக்திகளின் ஆதிக்கத்தால் தவறான முடிவுகளைஎடுத்து வருகிறார். வாஜ்பாய் இந்திய அரசியலில் பீஷ்மர் போன்றவர். அதற்காக அவரை எதிர்த்துப் போரிடாமல்இருந்தால், போரில் (தேர்தலில்) வெற்றி பெறுவது எப்படி? குருஷேத்திரத்தில் பீஷ்மரை எதிர்த்து பாண்டவர்கள்போரிடவில்லையா?

வாஜ்பாயை குறி வைத்தே எனது அம்புகள் பாயும். மற்றவர்கள் பலமில்லாதவர்கள். அதிமுகவுடன் பா.ஜ.க. கூட்டுவைத்ததில் வாஜ்பாயின் பங்கு ஏதுமில்லை. இந்தக் கூட்டணிக்கு அவர் வற்புறுத்தப்பட்டுள்ளார்.

இந்தக் கூட்டணியில் அவருக்கு மகிழ்ச்சியில்லை என்பதை 100 சதவீத உறுதியுடன் நான் கூறுவேன். இந்தக் கசப்புமாத்திரையை அவர் விழுங்கியே ஆக வேண்டும்.

வாஜ்பாயின் புகழை முன்னிருத்தி தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்று ஜெயலலிதா கனவு காணுகிறார்.அவரது கனவை நாங்கள் தகர்த்தெறிவோம். ஜெயலலிதாதான் எனது முதல் இலக்கு. அதற்காக வாஜ்பாயையும்,பா.ஜ.கவையும் விட்டுவிடப் போவதில்லை என்று கூறினார்.

வைகோ இன்று மாலை திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடக்கும் மதிமுக தேர்தல் நிதியளிப்புகூட்டத்தில் கலந்து கொண்டு, தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+