வாக்காளர்களுக்கு டிபன் பாக்ஸ்: தயாநிதி மீது அதிமுக புகார்
சென்னை:
மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆயிரம் விளக்கு பகுதியில் வாக்காளர்களைக் கவரும்வகையில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலினும், மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறனும்எவர்சில்வர் தட்டுக்கள், டிபன் பாக்ஸ்களை வழங்கியதாக தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார் கொடுத்துள்ளது.
இதுதொடர்பான புகாரை பொதுப்பணித்துறை அமைச்சரும், அதிமுக தேர்தல் குழு தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் கொடுத்துள்ளார்.
அந்தப் புகாரில், மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ளபெருமாள் முதலி தெரு, மாணிக்க மேஸ்திரி தெரு, ஆல்தோட்டம் ஆகிய இடங்களில் பொங்கல் விழா என்றபெயரில் எவர் சில்வர் தட்டு, டிபன் பாக்ஸ்களை ஸ்டாலினும், தயாநிதி மாறனும் வழங்கியுள்ளனர்.
பொங்கல் முடிந்து 2 மாதங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், அங்கு பொங்கல் விழா எதுவும் நடைபெறாதநிலையில், இப்படி பரிசுப் பொருட்களை வழங்குவது வாக்காளர்களை கவர லஞ்சம் கொடுப்பது போலாகும். இதுஅப்பட்டமான தேர்தல் விதி மீறலாகும்.
எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது மனுவில் கூறியுள்ளார்ஓ.பன்னீர் செல்வம்.
ஓட்டு வேட்டையில் டி.ஆர்.பாலு:
இந் நிலையில் திமுகவின் முக்கிய வேட்பாளர்களில் ஒருவரான தென் சென்னை தொகுதி வேட்பாளரானடி.ஆர்.பாலு சென்னை புறநகர்ப் பகுதியான ஆலந்தூர் பகுதியில் இன்று ஓட்டு வேட்டையில் இறங்கினார்.
அவருடன் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும்,தொண்டர்களும் உடன் சென்றனர். ஆலந்தூர் தவிர ஆதம்பாக்கம்பகுதியிலும் அவர் ஓட்டு வேட்டையாடினார். இங்கு மதிமுக நிர்வாகிகளும் அவருடன் பிரசாரத்தில் கலந்துகொண்டனர்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி











Click it and Unblock the Notifications