சரக்கு விமானத்தின் டயர் வெடித்தது, சென்னையில் பரபரப்பு
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியபோது சரக்கு விமானத்தின் டயர் வெடித்ததால் பெரும் பரபரப்புஏற்பட்டது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஏர் பிரான்ஸ் நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று சென்னை விமான நிலையத்தில்தரையிறங்கியது. அப்போது விமானத்தின் டயர்கள் வெடித்ததால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையில்இருந்த எட்டு சிக்னல் கம்பங்களை தகர்த்து விட்டு நின்றது.
இந்த விபத்தால் விமானத்தின் ஒரு பகுதி லேசான சேதமடைந்தது. வேறு விபரீதம் எதுவும் நேரவில்லை.உடனடியாக விமான நிலைய அதிகாரிகள் அவசரமாக செயல்பட்டு விமானத்தை பாதுகாப்பான பகுதிக்குக்கொண்டு சென்று விட்டனர்.
சென்னை விமான நிலையத்தில் கடந்த சில நாட்களில் இதுபோல விபத்து நடப்பது 3வது முறையாகும்.சனிக்கிழமை ரியாத் நகரிலிருந்து சென்னை வந்த செளதி அரேபிய விமானம் தரையிறங்கும்போது விபத்தில்சிக்கியது. விமானத்தின் இடது மற்றும் வலதுபுற இறக்கைகள் மற்றும் டயர்கள் இதில் சேதமடைந்தன.அதிர்ஷ்டவசமாக விமானத்தில் இருந்த 102 பயணிகளும் பத்திரமாக உயிர் தப்பினர்.
அதேபோல, கடந்த திங்கள்கிழமையன்று தாய்லாந்து விமானம் ஒன்று ஓடுபாதையை விட்டு இறங்கி விட்டது.அப்போதும் அதிர்ஷ்டவசமாக பயணிகள் தப்பினர்.
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு











Click it and Unblock the Notifications