பயங்கர தாக்குதல் திட்டம்: ரெளடிகள் கைது- வெடிகுண்டுகள் பறிமுதல்
சென்னை:
சென்னையில் ரெளடி கோஷ்டியிடமிருந்து 7 நாட்டு வெடிகுண்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். எதிர்கோஷ்டி மீது இந்தக் கும்பல் பயங்கர தாக்குதலுக்குத் தயாராகி வந்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் தென்னவன். அதே பகுதியைச் சேர்ந்தவர் பில்லா. இருவருமேபயங்கர ரெளடிகள். இவர்களுக்கிடையே கடந்த மாதம் பெரும் கோஷ்டி மோதல் வெடித்தது. இதையடுத்து இருதரப்பினரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் தென்னவன் கும்பலைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் கொடுத்த தகவலின் பேரில், கன்னிகாபுரத்தைச் சேர்ந்ததென்னவனின் தம்பி சரவணனின் வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர்.
அப்போது பூமிக்கடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 7 நாட்டு வெடிகுண்டுகள் சிக்கின. பில்லா கோஷ்டியைச்சேர்ந்தவர்களைத் தாக்க இந்த வெடிகுண்டுகள் தயார் செய்யப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.
சில நாட்களில் இந்தத் தாக்குதலை நடத்த தென்னவன் கோஷ்டி தயாராகி வந்ததும் தெரிந்தது.
இதையடுத்து சரவணன், கருப்பு சரவணன், கார்த்திக் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
தென்னவன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications