மதுரை உயர் நீதிமன்ற கிளை தொடக்க விழாவில் சிக்கல்
மதுரை:
நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக, மதுரையில் தொடங்கப்படவுள்ள உயர் நீதிமன்றக்கிளை திறப்பு விழாவை மிகவும் எளிமையாக நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மதுரையில் ரூ. 50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள உயர் நீதிமன்றக் கிளை கட்டடம் ஏப்ரல் 13ம் தேதிதிறக்கப்படவுள்ளது. தென் மாவட்ட மக்களின் நீண்ட கால கனவான உயர் நீதிமன்றக் கிளை கட்டடத் திறப்புவிழாவை பிரமாண்டமாக நடத்த நீதித்துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை நடந்திராத வகையில் சிறப்பாக நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. முதல்வர்ஜெயலலிதா உள்ளிட்ட விவிஐபிக்களையும் நிகழ்ச்சிக்கு அழைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.
இந் நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் குறுக்கிட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போது அமலில்உள்ளதால், ஆட்சியாளர்களை வைத்து விழா நடத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையத்தின் விதிமுறையில்கூறப்பட்டுள்ளது. இதனால் விழாவை மிகப் பிரமாண்டமாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக மத்திய, மாநில அமைச்சர்கள் யாரும் கலந்து கொள்ள முடியாது. ஆனால்முதல்வரோ அல்லது அமைச்சர்களோ இல்லாமல் விழாவை நடத்த நீதித்துறை தயக்கம் காட்டுகிறது. இதனால்திட்டமிட்டபடி ஏப்ரல் 13ம் திறப்பு விழா நடைபெறுமா அல்லது தேர்தலுக்குப் பிறகு தள்ளி வைக்கப்படுமா என்பதுகுறித்து கேள்விக்குறி எழுந்துள்ளது.
கடந்த 2000மாவது ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி மதுரை உலகனேரியில் ரூ. 50 கோடி செலவிலானஉயர் நீதிமன்றக் கிளைக்கு அடிக்கல் நாட்டினார். 62 ஏக்கர் பரப்பளவில் மதுரை உயர் நீதிமன்றக் கிளை அதி நவீனவசதிகளுடன் தயாராகி உள்ளது. மிகுந்த அழகுடன் கிளைக் கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் நீதிபதிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளார்கள். நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து இங்கு இடமாற்றம் செய்யப்படுவர். 5 நீதிபதிகளுடன் மதுரை உயர் நீதிமன்றம் செயல்படும்என்று ஏற்கனவே தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி அறிவித்துள்ளார்.
-
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications