ஜெவுக்காக பள்ளிகள் மூடல்.. தேர்வுகள் ஒத்திவைப்பு
ஈரோடு:
முதல்வர் ஜெயலலிதாவின் ஈரோடு தேர்தல் பிரச்சாரத்தையொட்டி தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு விடுமுறைஅளிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் ஜெயலலிதா ஈரோட்டில் இன்று பிரச்சாரம் செய்கிறார்.இதற்காக நேற்றிரவு ஈரோடு வந்த அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குப் பின்புறம் உள்ள ஆசிரியர்குடியிருப்பில் ஒரு தொழிலதிபருக்குச் சொந்தமான வீட்டில் தங்கினார்.
இதற்காக கடந்த 10 தினங்களாக இந்த வீடு புதுப்பிக்கப்பட்டது. அந்தப் பகுதியில் குண்டும், குழியுமாக இருந்தசாலைகள் சீரமைக்கப்பட்டன.
ஆசிரியர் குடியிருப்புப் பகுதியில் ஒரு தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளி உள்ளது. இங்கு 1 முதல் 5 வரைபடிக்கும் சுமார் 300 மாணவர்கள் உள்ளனர். ஜெயலலிதா அந்தப் பகுதியில் தங்கியிருப்பதால், பாதுகாப்புநடவடிக்கை காரணமாக பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அந்தப் பள்ளியில் இன்று நடைபெறுவதாகஇருந்த தேர்வுகள் நாளை மாலை நடத்தப்படுகின்றன.
அதேபோல் ஜெயலலிதாவின் பிரச்சாரத்திற்காக சத்திரோட்டில் போடப்பட்டிருக்கும் மேடையருகேவீரப்பன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. பள்ளியின் அருகே பொதுக்கூட்டம்நடைபெறவிருப்பதால் இன்று அரைநாள் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, இன்று காலை நடைபெறுவதாக இருந்த சமூக அறிவியல் பாடத் தேர்வு நேற்று அறிவியல் தேர்வுடன்சேர்த்து நடத்தப்பட்டது. இதனால் ஒரே நாளில் இரண்டு தேர்வுகளை எழுத வேண்டிய நிலைக்கு மாணவர்கள்தள்ளப்பட்டனர்.
இந்த பொதுக் கூட்ட மேடை தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியை அடைத்துவிட்டதால், பாதி சாலை தான்போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து தமிழகத் தேர்தல் ஆணையர்மிருத்யுஞ்சய் சாரங்கிக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் புகார் அனுப்பியுள்ளன.
இந் நிலையில் நாமக்கல் குளக்கரைத் திடலில் ராசிபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் அன்பழகனுக்காக பிரச்சாரக்பொதுக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா,
தீவிரவாதம் நாட்டை அச்சுறுத்துகிறது. அவர்களிடம் இருந்து நாட்டைக் காக்க அதிமுக உதவியுடன் மத்தியில்பா.ஜ.க அமைய வேண்டும். எதிரணியில் இருக்கும் சர்க்காரியா கமிஷன் புகழ் கருணாநிதி தன்னை உலகத்தமிழர்களின் தலைவர் என்பார். ஆனால், எந்தத் தமிழனுக்காக இவர் குரல் கொடுத்தார் என்றார் ஜெயலலிதா.
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications