தகதகக்கிறது தமிழகம்: மார்ச்சிலேயே மண்டையை பிளக்கும் வெயில்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மார்ச் மாதமாகிய இப்போதே தமிழகத்தின் பல இடங்களில் வெயில் உச்சத்தை எட்டி மக்களை வாட்டி எடுத்துவருகிறது.

நேற்று சேலத்தில் அதிகபட்சமாக 105 டிகிரியும், மதுரை, வேலூரில் 104 டிகிரியும் பதிவாகியுள்ளது.

அக்னி நட்சத்திரம் இந்த ஆண்டு மே 3ம் தேதி தொடங்கி மே 28ம் தேதி முடிகிறது. கடந்த ஆண்டு அக்னிநட்சத்திரத்தின் போது மே 30ம் தேதி சென்னையில் அதிக பட்சமாக 113 டிகிரி பதிவானது. இந்த ஆண்டும் அதேஅளவுக்கோ அல்லது அதற்கு அதிகமாகவோ இருப்பதற்குத்தான் வாய்ப்புள்ளதே தவிர, குறைய வாய்ப்பில்லைஎன்று வானிலை மைய அதிகாரிகள் கூறுகின்றனர்.

வெயில் கொடுமை ஒரு புறம் என்றால், தண்ணீர் பஞ்சமும் இந்த வருடம் மக்களை அதிக அளவில் பாதிக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. பருவமழை பொய்த்ததால் ஏரி, குளம், குட்டைகள் வறண்டு காணப்படுகின்றன. சென்னைஉள்ளிட்ட பெருநகரங்களில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது.

வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்க மக்கள் இளநீர், மோர், கரும்புச்சாறு மற்றும் குளிர்பானங்களின் தயவை மக்கள்நாடத் தொடங்கியுள்ளனர். தர்பூசணி விற்பனையும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+