ஜ.மு.கூ. கூட்டணியில் அதிகரித்து வரும் வைகோவின் செல்வாக்கு
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் செல்வாக்கு ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் நாளுக்கு நாள்அதிகரித்து வருகிறது.
பொடா கைதுக்குப் பிறகு ஜாமீனில் வெளியே வந்துள்ள வைகோவின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்துவருவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. குறிப்பாக திமுக தொண்டர்களிடையே வைகோவுக்குநல்ல செல்வாக்கு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
விருதுநகர் மாநாட்டில் மற்ற தலைவர்களை விட வைகோவை மிகுந்த உற்சாகத்துடனும், ஆரவாரத்துடனும் திமுகதொண்டர்கள் வரவேற்றது மேடையில் இருந்த அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் பெரும் ஆச்சரியத்தைஏற்படுத்தியது.
கருணாநிதிக்குப் பின் திமுக தலைவராகும் தகுதி வைகோவிடம் மட்டும்தான் உள்ளதாக திமுக தொண்டர்கள்மத்தியிலும் ஒரு பேச்சு தற்போது உலவி வருகிறது. மேலும், தயாநிதி மாறனை அரசியலில் புகுத்தி, பெருமைவாய்ந்த மத்திய சென்னை தொகுதியையும் திமுக தலைவர் கருணாநிதி தூக்கிக் கொடுத்திருப்பது தொண்டர்கள்மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கருதப்படுகிறது.
வைகோவுக்கு திமுகவினரிடையே பெருகி வரும் செல்வாக்கையடுத்து, வைகோ சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள்எதையும் ஒளிபரப்ப வேண்டாம் என்று சன் டிவிக்கு திமுக தலைமை தடை போட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால்சன் டிவியில் வைகோவைப் பார்க்கவே முடிவதில்லை.
இந் நிலையில், தனக்கும் திமுகவுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று வைகோ திட்டவட்டமாகக்கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், யார் இந்த வதந்திகளைப் பரப்புகிறார்கள் என்றுதெரியவில்லை. எதிர்க்கட்சிகளின் வேலையாகத்தான் இருக்க முடியும்.
கடந்த காலத்தில் கருணாநிதியை நான் கடுமையாக விமர்சித்திருந்தபோதும் கூட அவர் மீது மிகுந்த மரியாதைவைத்திருந்தேன். அவர் எனது அரசியல் குரு. அவரது ஆயுதப் பட்டறையில் நான் ஒரு முக்கிய ஆயுதம். என்னைஅவராலும், அவரை என்னாலும்தான் புரிந்து கொள்ள முடியும். யாராலும் எங்களை புரிந்து கொள்ள முடியாது.
கருணாநிதியுடன் தினசரி 2 முறையாவது தொடர்பு கொள்கிறேன். எனக்கும், அவருக்குமிடையே நல்ல உறவுஉள்ளது.
என்னையும், ஸ்டாலினையும் ஒப்பிட வேண்டாம். இருவரும் வேறு வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள். அதிமுகவைவீழ்த்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் இரு கட்சிகளும் சேர்ந்து செயல்படுகிறது. வெற்றி மட்டுமேஎங்களது தற்போதைய குறிக்கோள். திமுக ஒரு மாபெரும் இயக்கம். மதிமுக சாதாரண கட்சி. இதில் ஒப்பீட்டுக்கேஇடமில்லை என்றார் வைகோ.
சன் டிவியில் வைகோ இருட்டடிப்பு குறித்து கேட்டபோது, அது ஒரு தனியார் தொலைக்காட்சி. அவர்களதுவிருப்பப்படி என்ன வேண்டுமானாலும் செய்ய அவர்களுக்கு உரிமை உள்ளது. இதில் என்ன குழப்பம் வந்துவிட்டது? நான் தெளிவாகத்தான் இருக்கிறேன் என்றார் வைகோ.
கடந்த 14ம் தேதி சென்னை மண்ணடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் புதியகட்டடத் திறப்பு விழாவிலும் வைகோவுக்கே அதிக வரவேற்பு கிடைத்தது. வேறு தலைவர்களை பேச விடாமல்வைகோவை மட்டுமே பேசுமாறு முஸ்லீம் லீக் தொண்டர்கள் சப்தம் போட்டனர். இதனால் அதிருப்தி அடைந்தபா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பாதியிலேயே தனது பேச்சை நிறுத்திக் கொள்ள வேண்டியதாயிற்று என்பதுகுறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் செல்வாக்கு மிகுந்த நபராக வைகோ உருவாகி வருகிறார்என்பதில் சந்தேகமே இல்லை. இந்த செல்வாக்கு வைகோவுக்கு பலவிதங்களில் சாதகமாக முடியும் என்றும்அரசியல் வட்டாரத்தில் பேசப்படகிறது.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications