சிகிச்சைக்கு பின் நாடு திரும்ப தயாராகும் ஈராக் குழந்தைகள்
சென்னை:
சென்னையில் நடந்த இலவச இருதய சிகிச்சைக்குப் பின்னர் 18 ஈராக் நாட்டு குழந்தைகள் முழு குணமடைந்து,இன்று நாடு திரும்புகின்றனர். அவர்களை நடிகர் கமல்ஹாசன் சந்தித்து உரையாடினார்.
சென்னையில் உள்ள சர்வதேச இதய நோய்கள் சிகிச்சை மையத்தில் ஈராக் நாட்டைச் சேர்ந்த 18 குழந்தைகளுக்குஇலவச இதய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
போர் மற்றும் வறுமையில் சிக்கித் தவிக்கும் ஈராக் நாட்டைச் சேர்ந்த குழந்தைகளுக்குத் தேவையான மருத்துவஉதவிகள் முழுமையாகக் கிடைப்பதற்கு அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு அமைப்பு முயன்று வருகிறது. அந்தஅமைப்பின் மூலம் இந்த 18 குழந்தைகளும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.
பிரபல இருதய அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.எம்.செரியன் தலைமையிலான டாக்டர்கள் குழுஇவர்களுக்குரிய சிகிச்சைகளை மேற்கொண்டது. தற்போது சிகிச்சைக்குப் பின்னர் 18 பேரும் முழுஆரோக்கியத்துடன் உள்ளனர். இன்று இவர்கள் ஈராக் திரும்பவுள்ளனர்.
![]() |
இந்தக் குழந்தைகளை நடிகர் கமல்ஹாசன், ஆற்காடு இளவரசர் முகம்மது அலி ஆகியோர் பார்த்து உரையாடினர்.பின்னர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியபோது, ஒரு நடிகராக இங்கு நான் வரவில்லை. டாக்டர்செரியனின் விசிறியாக வந்துள்ளேன்.
இந்தக் குழந்தைகளைப் பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது. அதேசமயம், மொழி, நாடு, அரசியல்ஆகியவற்றை நாம் வென்று விட்டோம் என்ற பெருமிதம் உண்டாகிறது என்றார்.
டாக்டர் செரியன் கூறுகையில், மொத்தம் 20 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதாக முதலில்திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் 2 குழந்தைகளின் நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அவர்களுக்குசிகிச்சை அளிக்கவே முடியாத அளவுக்கு நிலைமை முற்றியிருந்தது. அவர்கள் மிகவும் தாமதமாக வந்ததால்எங்களால் ஒன்றும் செய்ய இயலாமல் போய் விட்டது. அவர்கள் எங்களது நினைவில் என்றும் இருப்பார்கள்.
மற்ற 18 பேரும் பாக்தாத் நகரிலிருந்து ஜோர்டானுக்கு சென்று, பின்னர் அங்கிருந்து மஸ்கட் சென்று பின்னர்சென்னைக்கு வந்தார்கள். இவர்களுடன் அவர்களது தாயார்களும் வந்துள்ளனர்.
18 குழந்தைகளும் கடினமான நிலையில்தான் இங்கு வந்தனர். ஆனால் இப்போது முழு குணமடைந்து, உற்சாகமாகஉள்ளனர். இந்தக் குழந்தைகளுக்கான சிகிச்சை செலவை கிறிஸ்வத ஒலிபரப்புக் கழகம் ஏற்றுக் கொண்டுள்ளதுஎன்றார்.
ஈராக்கின் நிலை குறித்தும், அங்கு நிலவும் சூழ்நிலை குறித்தும் ஒன்றும் கவலைப்படாமல், சந்தோஷத்தை மட்டுமேதங்களது முகத்தில் தேக்கி வைத்திருந்த அந்த குழந்தைகளைப் பார்க்கும்போது போரின் மீதும், போர்தொடுத்தவர்கள் மீதும் ஆத்திரம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
பாக். சிறுவனுக்கு சிகிச்சை:
இதற்கிடையே பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முகம்மது அஸீம் என்ற 14 வயது சிறுவனுக்கு கோவையிலுள்ள ஒருதனியார் கண் மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைக்குப் பின் அந்த சிறுவன்குணமடைந்து வருவதாக மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ராமமூர்த்தி கூறியுள்ளார்.
-
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
விஜய் ஜாதகத்தில் சுக்கிர திசை! 2034 வரை அசைக்க முடியாது! அண்ணாமலைக்கும் யோகம்! ஷெல்வி கணிப்பு -
சி.எம் ஏரியாவுக்கே இந்த கதியா? இருளில் நீலாங்கரை! விஜய் வீட்டு தெருவில் போராட்டத்தில் குதித்த மக்கள் -
விஜய்யின் ‘ஆபரேஷன் 12’.. நம்பி வந்தவர்களை கழற்றிவிடப்போகும் விஜய்? தவெக-வின் ரகசிய மூவ்! -
பெரிய மீனை இறக்கிய விஜய்.. லட்டு மாதிரி திமுகவிற்கு சாதகமான முடிவு.. ஸ்டன் ஆகி நின்ற தவெக! -
இவ்வளவு நாள் ஆண்டவங்களால செய்ய முடியாததை... உடனே விஜய் எப்படி செய்வார்? குஷ்பூ ஓபன் டாக்! -
விஜய் மேஜையில் இருக்கும் 4 ஃபைல்.. 'எஸ்' சொல்வாரா.. 'நோ' சொல்வாரா? கோட்டையில் அரங்கேறும் க்ளைமாக்ஸ் -
விஜய்க்கு முதல் அக்னி பரீட்சை.. காரணம் வேற யாரும் இல்லை காங்கிரஸ் தான்.. அடுத்து என்ன? -
வேலுமணி ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா! எடப்பாடி பழனிசாமிக்கு பேரதிர்ச்சி! -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
எடப்பாடி செய்த அந்த 3 தவறுகள்.. "முக்குலத்தோர் கோபம்.." உடைந்து சிதற போகுது கட்சி? அடுத்து என்ன













Click it and Unblock the Notifications