மீண்டும் உற்சாகமாய் வலம் வரும் திருநாவுக்கரசர்!
தர்மபுரி:
தர்மபுரியில் பா.ஜ.க. வேட்பாளராகப் போட்டியிடும் பு.தா. இளங்கோவனை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய வந்தமத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் தனது பழைய உற்சாகம் சற்றும் குறையாமல் படு தெம்பாகக் காட்சியளித்தார்.
ஜெயலலிதாவின் கடுமையான நிபந்தனை காரணமாக தமிழகத்தின் எந்தத் தொகுதியிலும் திருநாவுக்கரசர்போட்டியிட முடியாமல் போய் விட்டது. மேலும் அவர் விரும்பிய புதுக்கோட்டை தொகுதியும் கிடைக்கவில்லை.
இதனால் பாண்டிச்சேரியில் போய் கட்சி வேலைகளைப் பார்க்க ஆரம்பித்த திருநாவுக்கரசரை கட்சி மேலிடம்பிரச்சாரத்தில் இறங்குமாறு கேட்டுக் கொண்டதால், பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாகக் களம் இறங்கியுள்ளார்.
அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்காகவும் பிரச்சாரம் செய்யத் தயார் என்றும் அவர் அறிவித்துள்ளார். ஆனால்அவரைப் பிரச்சாரத்திற்குக் கூப்பிட்டால் அம்மாவின் கோபத்தை எப்படி எதிர்கொள்வது என்ற பயத்தில்புதுக்கோட்டை அதிமுக வேட்பாளர் உள்ளிட்ட அதிமுகவினர் திருநாவுக்கரசரிடம் இன்னும் போகாமல் உள்ளனர்.
இதைப் பற்றிக் கொஞ்சம் கூட கவலைப்படாத திருநாவுக்கரசர் தற்போது பு.தா.இளங்கோவன் உள்ளிட்ட பா.ஜ.க.வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
புதுக்கோட்டையை இழந்ததால் கொஞ்சம் தளர்ந்து போயிருந்த திருவிடம் இப்போது பழைய களை வந்துவிட்டது.தர்மபுரி வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, படு ஜாலி மூடில் இருந்தார். மீண்டும் சினிமாவில்நடிப்பீர்களா என்று கேட்டபோது, நான் ரெடியாகத்தான் இருக்கிறேன். ஆனால் எனக்கு வயதாகி விட்டதாகதயாரிப்பாளர்கள் கூறுவார்களே? என்றார்.
உங்களுக்குத் தான் ஹீரோ லுக் இருக்கே, தாராளமாக நீங்கள் படத்தில் நடிக்கலாமே என்று ஒரு நிருபர் சொல்ல,அப்படியா.. அப்ப நீங்களே ஒரு படத்தை எடுங்க.. பிரீயாவே நடிச்சுத் தர்றேன் என்றார்.
மணி முடி இல்லாவிட்டால் என்ன, அரசர், அரசர்தான்
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications