விழுப்புரம் அதிமுக வேட்பாளருக்கு ரஜினி மன்றம் ஆதரவு
விழுப்புரம் & மதுரை:
இந்தத் தேர்தலில் யாரையாவது ஆதரிக்கிறாரா இல்லையா, ஆதரவு என்றால் அது யாருக்கு போன்றவிஷயங்களில் ரஜினி வெளிப்படையாக எதையும் சொல்லாமல், ஆழ்ந்த மெளனத்தில் இருப்பது போல காட்டிக்கொண்டாலும், அவரது ரசிகர்களின் செயல்பாடுகள் வேறு மாதிரியாக உள்ளன.
திண்டிவனம் தொகுதி அதிமுக வேட்பாளர் அருண்மொழித் தேவனை ஆதரித்து தீவிரப் பிரச்சாரம் செய்யப்போவதாக விழுப்புரம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக விழுப்புரத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளின் அவசரக் கூட்டம் நடந்தது. அப்போது, பாபாதிரைப்படம் திரையிடப்பட்டபோது, அதை திரையிடவிடாமல் பா.ம.கவினர் நடத்திய அட்டூழியச் செயல்களைநம்மால் மறக்க முடியாது. எனவே திண்டிவனம் தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளரை படு தோல்விஅடையச் செய்வதுதான் நமது தலைவருக்கு நாம் கொடுக்கும் சரியான பரிசாக இருக்க முடியும்.
எனவே திண்டிவனத்தில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் அருண்மொழித் தேவனுக்கு ஆதரவாக 6சட்டசபை தொகுதிகளிலும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டத்திற்கு தலைமைதாங்கிய மன்றத் தலைவர் ரஜினி இப்ராகிம் இத் தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பா.ம.க. போட்டியிடும் தொகுதிகளில் அக்கட்சிக்கு எதிரான, பலமான கட்சியின் வேட்பாளரை ஆதரிக்குமாறுஎங்களுக்கு ரஜினியிடம் இருந்து ரகசிய உத்தரவு வந்துள்ளது. இதையடுத்தே இந்த முடிவை எடுத்தோம்என்கின்றனர் ரசிகர்கள்.
எனக்கும் வேணும்.... சு.சுவாமி:
யாருமே தனக்கு ஆதரவாக இல்லை என்பதால், ரஜினிகாந்த்தின் ஆதரவைப் பெறப் போவதாக மதுரையில்தனியே.. தன்னந்தனியே போட்டியிடும் ஜனதாக் கட்சி தலைவர் சுப்ரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
மதுரை நாடாளுமன்றத் தேர்தலில் ஜனதாக் கட்சி சார்பில் சுயேச்சையாகப் போட்டியிடும் சுப்ரமணியம் சுவாமி,ஜெயலலிதாவின் ஆதரவைக் கோரினார். ஆனால் அம்மா அவரைக் கண்டு கொள்ளவில்லை. மாறாக, தனது கட்சிசார்பில் ஏ.கே.போஸ் என்ற பஸ் அதிபரை வேட்பாளராக களம் இறக்கி விட்டுவிட்டார்.
இதனால் சற்றும் மனம் தளராத சுவாமி, தொடர்ந்து ஜெயலலிதாவின் புகழ் பாடி வருகிறார். ஆனால் அம்மாவின்கடைக்கண் பார்வை அவருக்குக் கிடைக்காமலேயே உள்ளது.
இப்படியேப் போனால் என்ன செய்வீர்கள் என்று கேட்டால், ரஜினியின் ஆதரவைக் கேட்பேன் என்று கூலாக பதில்சொல்கிறார் சுவாமி.
இந்தத் தேர்தலில் யாரைக் கேட்டாலும் ரஜினி எங்களுக்குத்தான் ஆதரவு தருகிறார் என்று கூறுகிறார்கள். அந்தவகையில் சுவாமியும் ரஜினியின் ஆதரவைக் கோருவதில் தவறில்லையே!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications