சென்னை: 2 குழந்தைகளை கொன்று தாயும் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Sujathசென்னையில் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு என்ஜீனியர் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை கிண்டி அம்பாள்நகர் கபிலர் தெருவை சேர்ந்தவர் அறிவுடை நம்பி. இவரது மனைவி சுஜாதா (29).திருமணமாகி 6 வருடங்கள் ஆன இவர்களுக்கு இனியன் (5), முகிலன்(1.5) என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

அறிவுடைநம்பி அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார்.இவருக்குச் சரியான வருவாய் இல்லாததால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந் நிலையில் தாம்பரம் மருத்துவமனையில் இருதய நோய்க்கு சிகிச்சை பெற்று வரும் தாயார் தனலட்சுமியைப்பார்க்க அறிவுடை நம்பி சென்றுள்ளார்.

அம்மாவைப் பார்த்து விட்டு இன்று காலை அவர் வீட்டுக்கு திரும்பியபோது, அங்கு அவரது 2 குழந்தைகள்படுக்கையில் வாயில் நுரை தள்ள பிணமாகக் கிடந்ததையும், மனைவி சுஜாதா சமையல் அறையில் தூக்கு போட்டுதற்கொலை செய்து கொண்டதையும் பார்த்தார். கதறி அழுதவாறே கிண்டி காவல் நிலையத்துக்குத் தகவல்கொடுத்தார்.

உதவி கமிஷனர் ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் கருப்பசாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து,பிணங்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

குழந்தைகளுக்கு சுஜாதா அமிலம் கொடுத்து அவர்கள் சாகாததால் கழுத்தை வயர் கொண்டு இறுக்கிக் கொலைசெய்திருக்கலாம் என்றும் பின்னர் அவர் சமையலறைக்குச் சென்று தூக்கு போட்டிருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+