தெலுங்கில் பேசிய கருணாநிதி
தளி:
கிருஷ்ணகிரி தொகுதிக்குட்பட்ட தளி பகுதியில் கருணாநிதி பிரசாரம் செய்கையில், திமுக வேட்பாளர்சுகவனத்திற்கு ஓட்டளிக்குமாறு தெலுங்கில் கேட்டுக் கொண்டார்.
திமுக தலைவர் கருணாநிதி தனது தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி தொகுதிக்குட்பட்ட தளிபகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், மத்தியில் சோனியா காந்தியால் மட்டுமேமதச்சார்பற்ற ஆட்சியை அமைக்க முடியும். அதேபோல மாநிலத்தில் திமுக தலைமையிலான ஜனநாயகமுற்போக்குக் கூட்டணியால்தான் மதச்சார்பற்ற, தமிழ் உணர்வுள்ள ஆட்சியை அமைக்க முடியும்.
அயோத்தியில் மிகப் பெரிய ராமர் கோவிலைக் கட்டுவோம் என்று பா.ஜ.க. மீண்டும் முழங்கத் தொடங்கி விட்டது.நாடு இன்னொரு ரத்தக் களறியை சந்திக்கப் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.
பிரசாரத்தின் இடையே, தளி பகுதியில் பெரும்பான்மையினராக உள்ள தெலுங்கு மக்களை குஷிப்படுத்தும்விதமாக "சுகவனம்கி உதயசூரியன்லு வோட் வெயண்டி" என்று தெலுங்கில் மாட்லாடி அசத்தினார் கருணாநிதி.


Click it and Unblock the Notifications
