கருணாவை தீர்த்துக் கட்ட பிரபாகரன் உத்தரவு
கொழும்பு:
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்று அந்த இயக்கத்துக்கு எதிராக செயல்பட்டு வரும் கருணாவை தீர்த்துக்கட்ட அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக புலிகளின் அரசியல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மட்டக்களப்பு-அம்பாறையின் தற்போதைய நெருக்கடி தொடர்பாக அங்குள்ள போராளிகளுக்கும் பொறுப்பாளர்களுக்கும்புலிகளின் தலைமைப் பீடம் விடுக்கும் வேண்டுகோள்.
நமது மண்ணின் பெருமைக்கும் மாவீரர்களுக்கும் களங்கத்தை ஏற்படுத்தியிருக்கும் கருணாவின் நடவடிக்கைகள் தொடர்பாகநீங்கள் உண்மைகளைப் புரிந்து கொண்டு, சரியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.
மட்டக்களப்பு-அம்பாறையின் தளபதியாக இருந்த கருணா தான் புரிந்த குற்றங்களை மறைப்பதற்காக பிரதேச வேறுபாட்டையும்சகோதரச் சண்டையையும் ஒருங்கே ஏற்படுத்த முனைகிறார். மட்டக்களப்பு போராளிகள் பிரபாகரனை சந்திக்கவிடாமல் தடுத்துவைத்திருந்து தன் குற்றங்களை மறைக்க முயன்றார்.
அதையும் மீறி அவரது பாலியல் குற்றங்களும் நிதி மோசடிகளும் தன்னிச்சையான படுகொலைகளும் தலைமையிடம்அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டபோது விசாரணைக்காக அவர் அழைக்கப்பட்டார். தனது குற்றங்கள் நிரூபணமாகி ஒழுங்குநடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை அறிந்த கருணா உங்களை முன்னிருத்தி பலி கொடுக்க முயல்கிறார்.
ஆனால் அப்பாவி போராளிகள் இந்த விஷயத்தில் பலியவாதில் பிரபாகரனுக்கு விருப்பமில்லை. இனத்தைக் காப்பதற்காகதுரோகி கருணாவை இந்த மண்ணிலிருந்து களைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே கருணாவுடன்இருக்கும் போராளிகள் விலகி பிரபாகரனிடம் வரவேண்டும்.
கருணாவிடம் இருந்து விலகி தமது குடும்பத்துடன் சேர்ந்து வாழ விரும்புவர்களுக்கும் பிரபாகரன் அனுமதி தந்துள்ளார்.போராளிகள் எவராவது இனிமேலும் கருணாவின் சார்பாக ஆயுதமேந்தி நின்றால், அதன் விளவுகளுக்கு அப்போராளியேதனிப்பட்ட பொறுப்பாவார். அவரின் இறப்பும் மாவீரர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது.
மட்டக்களப்பு- அம்பாறை மண்ணின் வீர வரலாறு கருணாவால் கறைபடித்து நிற்கலாகாது. மண்ணின் மாவீரமும் அர்ப்பணிப்பும்உழைப்பும் தலை நிமிர்ந்து நிற்கும் வகையில் அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கருணாவைக் கொலை செய்யப் போவதாக புலிகள் இயக்கம் நேரடியாகக் கூறாவிட்டாலும், அவருக்கு எதிராக death warrantபிறப்பிக்கப்பட்டுவிட்டதாகக் கருதப்படுகிறது.
இதற்கிடையே புலிகளின் இந்த விவகாரத்தில் இருந்து விலகி இருக்கப் போவதாக நார்வே அமைதிக் குழு கூறியுள்ளது.
புலிகளின் இந்த அறிவிப்பையடுத்து கருணா தலைமையிலான படையினர் மறைவிடத்துக்குச் சென்றுவிட்டனர். கருணா மீதுபெரும் படை கொண்டு புலிகள் தாக்குதல் நடக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது. கமாண்டோ படையினரைக் கொண்டுதாக்குதல் நடக்கலாம் என்று கருதப்படுகிறது.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது












Click it and Unblock the Notifications