சோனியா-வாசன் உடன்பாடு: காங். வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு?
டெல்லி:
தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் 8 வேட்பாளர்கள் அடங்கிய 2வதுமற்றும் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று தெரிகிறது. சோனியா காந்தியுடன் வாசன்நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து பட்டியல் முடிவாகியுள்ளது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் மயிலாடுதுறை மற்றும் நீலகிரி தொகுதிவேட்பாளர்களாக முறையே மணிசங்கர் அய்யர், பிரபு ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். மற்ற 8 பேரும்இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்த வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் சிக்கல் நீடித்தது. இச் சூழ்நிலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளவேட்பாளர் தேர்வுக் குழுவில் இடம் பெற்றுள்ள மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி, வயலார் ரவி ஆகியோர்,கடந்த 2 நாட்களாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனுடன் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் வாசன் சந்தித்துப் பேசினார். அப்போது அவரதுஆதரவாளர்களுக்கு மேலும் சில இடங்களைத் தர சோனியா ஒப்புக் கொண்டதையடுத்து புதிய பட்டியல்தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி பழனி தொகுதியை வழக்கறிஞர் காந்திக்குப் பதிலாக கார்வேந்தனுக்கும்,ராசிபுரம் தொகுதியில் ராணியை நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிதம்பரத்துக்கோ அல்லது அவரது மகன் கார்த்திக்குக்கோ சிவகங்கை தொகுதியை ஒதுக்கவும் வாசன் ஒப்புக்கொண்டுவிட்டார்.
இதையடுத்து இன்றே காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?











Click it and Unblock the Notifications