பிளஸ் டூ கணிதத் தேர்வில் தவறான கேள்வி: மாணவ-மாணவிகள் குழப்பம்
சென்னை:
பிளஸ் டூ கணிதத் தேர்வில் தவறான கேள்வி கேட்கப்பட்டதால் மாணவர்கள் அதற்கு பதில் எழுத முடியாமல்தவித்தனர்.
கடந்த 10ம் தேதி தொடங்கிய பிளஸ்- டூ தேர்வுகள் இன்றுடன் முடிவடைந்தன. இந் நிலையில் இன்று நடந்த கணிதத்தேர்வில் 5 மதிப்பெண் கொண்ட ஒரு கேள்வி தவறானதாக இருந்தது. இதனால் அதற்கு என்ன விடையெழுதுவதுஎன்று தெரியாமல் அவர்கள் குழம்பினர்.
தேர்வுக் கண்காணிப்பாளர்களிடம் மாணவ, மாணவிகள் இது குறித்துக் கேட்டபோது அவர்கள் உயர்அதிகாரிகளைத் தொடர்பு கொண்டனர். தேர்வு நடக்கும் நிலையில் ஏதும் செய்ய முடியாது என்பதால், அந்தக்கேள்வியைத் தவிர்த்துவிடும்படி மாணவ, மாணவிகளுக்கு பதில் தரப்பட்டது.
இந்தத் தவறான கணக்கு, பாடப் புத்தகத்திலும் இருந்துள்ளது. இதனால் அதை நீக்குமாறு பல்வேறு பள்ளிகளில்இருந்து எடுத்துச் சொல்லப்பட்டும் கூட அதை கல்வித்துறை கடைசி வரை நீக்கவில்லை. இந் நிலையில் அதேகணக்கு இன்று கேள்வித் தாளிலும் கேட்கப்பட்டுவிட்டது.
கடந்த ஆண்டும் இதே போல ஒரு 10 மதிப்பெண் கொண்ட கேள்வி தவறாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து அந்தக் கேள்விக்கு என்ன விடை எழுதியிருந்தாலும் முழு மதிப்பெண் தருமாறு தேர்வுத்துறைஉத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த முறையும் அதே முறை பின்பற்றப்படும் என்று நம்பப்படுகிறது.
நாளை முதல் எஸ்எஸ்எல்சி தேர்வுகள்
இந் நிலையில் தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் நாளை தொடங்குகின்றன. மொத்தம் 6.79 லட்சம் மாணவ-,மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.
நாளை தொடங்கி வருகிற 16-ம் தேதி வரை இத் தேர்வுகள் நடக்கும்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை மாநிலம் முழுவதும் 2, 358 மையங்களில் மொத்தம் 6.79 லட்சம் மாணக்கர்கள் எழுதஉள்ளனர். சென்னை நகரில் மட்டும் மொத்தம் 35,440 மாணவ-, மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.
மெட்ரிக்குலேஷன் பள்ளித் தேர்வினை மொத்தம் 86,735 மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள். ஆங்கிலோஇந்தியன் தேர்வை 4,814 பேர் எழுதுகிறார்கள்.
வினாத்தாள் வைக்கப்பட்டிருக்கும் தேர்வு மையங்கள் அனைத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும்போடப்பட்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரம் தொடங்கியுள்ளதால் பல கட்சியினரும் ஆங்காங்கே மைக்குகளைக் கட்டி அலற விட்டுள்ளனர்.இதனால், பிளஸ் டூ தேர்வுக்கு தயாரான மாணவ, மாணவிகளும், பத்தாம வகுப்பு மாணவ, மாணவிகளும் பெரும்தொந்தரவுக்கு ஆளாகியுள்ளனர்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications