ராபின் மெயின் வழக்கு: காளிமுத்துவின் விடுதலை ரத்து- நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
சென்னை:
ராபின் மெயின் வழக்கில் இருந்து சபாநாயகர் காளிமுத்துவை விடுவித்தது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து அவர் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும்உத்தரவிட்டுள்ளது.
1984-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்ஜிஆரின் அமைச்சரவையில் காளிமுத்து வேளாண்மைத் துறைஅமைச்சராக இருந்தார். அப்போது தன்னுடைய செல்ஜாக்கைப் பயன்படுத்தி 8 வங்கிகளில், பழைய வாகனங்களைவாங்குவதற்காக ராபின் மெயின் என்பவருக்கு ரூ. 56 லட்சம் கடன் வாங்கித் தந்தார்.
இதற்காக அந்த 8 வங்கி மேலாளர்களை காளிமுத்து தொடர்புகொண்டு, தனது கட்டுப்பாட்டில் உள்ள வேளாண்மைவிற்பனை வாரியத்தின் நிதியில் இருந்து பெருமளவு தொகையை வங்கிகளில் முதலீடு செய்வதாகவும் அதற்குப்பிரதி உபகாரமாக ராபின் மெயினுக்குக் கடன் வழங்க வேண்டும் என்றும் மிரட்டினார். இதையடுத்து வங்கிஅதிகாரிகள் பணிந்தனர்.
மேலும் கடனைப் பெறுவதற்காக ராபின் மெயின் ஏகப்பட்ட போலி ஆவணங்களைப் பயன்படுத்தியிருந்தார். இந்தவிவகாரம் பெரிய சர்ச்சையாக உருவெடுத்ததையடுத்து காளிமுத்து மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இந்திய தண்டனைச் சட்டம் 120பி, 420 ஆகிய பிரிவுகளில் ராபின் மெயின் மற்றும் காளிமுத்து மீது சிபிஐ வழக்குத்தொடர்ந்தது.
ஆனால், அரசு ஊழியராக (அமைச்சராக) இருப்பதால் தன் மீது வழக்குத் தொடர உரிய அதிகாரிகளின் அனுமதிதேவையென்றும், அதைப் பெறாமலேயே வழக்குப் பதிவு செய்யப்படுள்ளதால், தன்னை இந்த வழக்கில் இருந்துவிடுவிக்கும்படி காளிமுத்து சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதை ஏற்றுக்கொண்ட சிபிஐ நீதிமன்றம் காளிமுத்துவை வழக்கில் இருந்து விடுவித்தது.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது. முக்கிய குற்றவாளியானகாளிமுத்துவை இந்த வழக்கில் இருந்து விடுவித்தது செல்லாது என்று தனது மனுவில் சிபிஐ கூறியிருந்தது. இந்தவழக்கு விசாரணை நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இந் நிலையில் நேற்று இந்த வழக்கு நீதிபதி அசோக்குமார் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிஅசோக்குமார் தனது தீர்ப்பில் கூறியதாவது:
யாருக்கோ கடன் வாங்கித் தர நேரடியாகவோ தனிச் செயலர் மூலமாகவோ வங்கி அதிகாரிகளிடம் பேசுவது ஒருஅமைச்சரின் வேலை அல்ல.
இத்தகைய நடவடிக்கைகள் ஒரு அரசு ஊழியருக்கு அழகல்ல. குற்றம் சாட்டப்பட்ட காளிமுத்து தனதுகடமைகளுக்குத் தொடர்பில்லாத செயல்களில் ஈடுபட்டாரா அல்லது இந்த வழக்கு கற்பனையானதா என்பதைவிசாரணை நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும்.
வழக்கு தொடரப்பட்டபோது காளிமுத்து அரசு ஊழியராக இல்லை. இதனால் அவர் மீது வழக்கு தொடர்வதற்கு,எந்த அதிகாரியிடமும் சிபிஐ அனுமதி பெறத் தேவையில்லை. எனவே காளிமுத்துவை விடுவித்து விசாரணைநீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்கிறேன்.
வழக்கு விசாரணைக்காக காளிமுத்து ஏப்ரல் 16-ம் தேதி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று தீர்ப்புகூறினார்.
காளிமுத்து மீது இந்த விவகாரம் தவிர, மதுரை அரசரடி எஸ்.எஸ். காலனி பகுதியில் அரசு நிலத்தை சுருட்டியதுஉள்ளிட்ட புகார்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!










Click it and Unblock the Notifications