தர்மபுரியில் திமுகவினர் மீது அதிமுகவினர் தாக்குதல்
தர்மபுரி:
தர்மபுரியில் திமுக தலைவர் கருணாநிதியின் பேச்சைக் கேட்பதற்காக வந்த திமுக தொண்டர்களை,அதிமுகவினர்தாக்கியதால் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக தலைவர் கருணாநிதி தர்மபுரி வள்ளலார் மைதானத்தில் உரையாற்றினார். கருணாநிதியின் பேச்சைக்கேட்பதற்காக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மைதானத்தில் திரண்டனர். அவர்களில் சிலர், மைதானத்தைச்சுற்றிலும் எழுதப்பட்டிருந்த அதிமுக தேர்தல் வாசகங்களை அழித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அவர்களுக்கும் அதிமுக தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் திமுக தொண்டர்கள்சிலர் சரமாரியாகத் தாக்கப்பட்டனர். உடனடியாக போலீஸார் தலையிட்டு இரு தரப்பினரையும் கலைந்து போகச்செய்தனர்.
இருப்பினும் திமுக தொண்டர்களைத் தாக்கிய அதிமுகவினரைக் கைது செய்யக் கோரி முன்னாள் திமுக அமைச்சர்முல்லைவேந்தன் தலைமையில் சேலம் சாலையில், நூற்றுக்கணக்கான திமுகவினர் சாலை மறியல் செய்தனர்.
மாவட்ட ஆட்சித் தலைவர் சித்திக், காவல்துறைக் கண்காணிப்பாளர் பெரியய்யா உள்ளிட்டோர் விரைந்து சென்றுமுல்லைவேந்தனை சமாதானப்படுத்தி அனைவரையும் அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications