ஜெ. ஆட்சியில் மழையே வர பயப்படுகிறது: கருணாநிதி
தர்மபுரி & சேலம்:
முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் மழை கூட வரப் பயப்படுகிறது என்று திமுக தலைவர் கருணாநிதிகூறியுள்ளார்.
தர்மபுரி தொகுதி வேட்பாளர் செந்திலை ஆதரித்து அவர் பேசியாதாவது:
மதமாற்ற தடை சட்டம், ஆடு, கோழி பலியிட தடை சட்டம் கொண்டு வந்தார் ஜெயலலிதா. இப்போது தேர்தல்வந்தததும் சட்டத்தை தளர்வு செய்துள்ளார். இந்த ஆட்சியில் மழையே வர பயப்படுகிறது. பக்கத்துமாநிலங்களுடன் நல்லுறவு வைத்திருந்தால், குடிநீர்ப் பிரச்னைகளை சொல்லி மக்களை காப்பாற்றலாம்.
ஆனால் ஜெயலலிதாவோ சட்டசபையிலேயே பக்கத்து மாநில முதல்வர்களை வசைபாடுகிறார். அவர்களிடம்எப்படி தண்ணீர் கேட்க முடியும்? வறட்சியை சமாளிக்கும் ஆற்றல் ஜெயலலிதாவிற்கு இல்லை. இதனால் தான்தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா எழுதிக்கொடுத்ததை படித்து வருகிறார். இன்னமும் கத்துக்குட்டியான அவர், காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தியை கத்துக்குட்டி என்று விமர்சனம் செய்து வருகிறார்.
பதிபக்தி இல்லாதவர் என்று சோனியா காந்தியை ஜெயலலிதா பேசிவருகிறார். இது தேர்தல் விதிமுறை மீறலாகும்.தேர்தல் விதிமுறைகள் ஆளுங்கட்சியினருக்கு கிடையாதா என்ற சந்தேகம் எனக்கு எழுந்துள்ளது.
ஒரு முதல்வர் எப்படி பேசவேண்டும் என்று நான் கூற வரவில்லை. இப்படி பேசுபவர் முதல்வராக இருக்கலாமாஎன்பதே எனது கேள்வி?
மக்கள் நலன் காக்கும் இலவச மின்சாரம் போன்ற பல்வேறு திட்டங்களை நாங்கள் கொண்டு வந்தோம்.அதையெல்லாம் ஜெயலலிதா முடக்கி வருகிறார். ஜெயலலிதா கேட்பதுபோல் கேட்கிறேன். மக்கள் விரோதநடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு உங்கள் ஆதரவா அல்லது மக்கள் நலன் காக்கும் திட்டங்கள் கொண்டுவந்தஎங்களுக்கு உங்கள் ஆதரவா? என்று பேசினார்.
பின்னர் சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தங்கபாலுவை ஆதரித்துப் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:
பாஜக முன்பு ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பளிப்போம் என்று கூறியது. இப்போது ஒரு கோடி பேருக்குவேலைவாய்ப்பு அளிக்க ஏற்பாடு செய்வோம் என்கிறது. இரு சபையையும் கூட்டி பொடா சட்டத்தைநிறைவேற்றியவர்கள் மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்ற முயற்சிக்கவில்லை.
ராமர் கோவிலை துணைப் பிரதமர் அத்வானி வீட்டிலோ, ஜெயலலிதா வீட்டிலோ கட்டிக் கொள்ளட்டும். பாபர்மசூதி இடித்த இடத்தில் கட்ட வேண்டாம் என்றுதான் நாங்கள் கூறுகிறோம் என்றார்.
சேலம் பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications