மதுரை உயர் நீதிமன்ற கிளை திறப்பு ஜூன் வரை தள்ளிப் போகும்
சென்னை:
மதுரையில் அமைக்கப்பட்டுள்ள உயர் நீதிமன்றக் கிளை திறப்பு மூன்றாவது முறையாக தள்ளி வைக்கப்படவுள்ளது.
தேர்தல் முடிந்து, நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் தொடங்கும் வரை அதாவது ஜூன் மாதம் முதல் வாரம் வரைதிறப்பு விழாவுக்கு வாய்ப்பில்லை என்று உறுதியாகத் தெரிய வந்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளை மதுரையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் முடிவடைந்தநிலையில் திறப்பு விழாவுக்காக சில மாதங்களாக காத்துக் கொண்டுள்ளது. ஏற்கனவே 2 முறை திறப்பு விழா தேதிகுறிக்கப்பட்டு அது தள்ளிப் போனது.
இந் நிலையில், ஏப்ரல் 13ம் தேதி கிளை திறக்கப்படும் என்று தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி திட்டவட்டமாகஅறிவித்தார். ஆனால் அது திட்டமிட்டபடி நடக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து, நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடருக்குப் பிறகுதான் மதுரை உயர்நீதிமன்றக் கிளை திறப்பு குறித்து இறுதியாகத் தெரிய வரும் என்று கூறப்படுகிறது.
மதுரையில் உயர் நீதிமன்றக் கிளையைத் திறக்க வேண்டுமானால், குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், கிளை திறப்புதொடர்பான சட்டத்தை பிறப்பிக்க வேண்டும். ஆனால் தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடவடிக்கைகள்அமலில் உள்ளதால் மே 10ம் தேதி வரை குடியரசுத் தலைவடமிருந்து கிளை திறப்பு தொடர்பான சட்டத்தைஎதிர்பார்க்க முடியாது.
மேலும், அரசியல் சாசனச் சட்டம் 8-வது பட்டியல், தொகுதி 1, 78வது பகுதி 214வது பிரிவின்படி, நாடாளுமன்றம்மூலமே உயர் நீதிமன்றக் கிளையை நிறுவும் உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும். இதன் காரணமாக மதுரை உயர்நீதிமன்றக் கிளை இந்த முறையும் தள்ளிப் போகும் என்று உறுதியாகத் தெரிகிறது.
ஜூன் மாதம் முதல் வாரம்தான் புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் தொடங்குகிறது. எனவே அந்தசமயத்தில்தான் திறப்பு விழா குறித்து தெரிய வரும் என்று கருதப்படுகிறது.
இருப்பினும் மதுரை உயர் நீதிமன்றக் கிளையை திறப்பதற்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கடும்எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல்வேறு வகையான முயற்சிகளிலும் அவர்கள் இறங்கியுள்ளனர். எனவேமதுரை உயர் நீதிமன்றக் கிளை திறப்பு அவ்வளவு எளிதான விஷயமாக இருக்காது என்கிறார்கள் விவரமறிந்தவழக்கறிஞர்கள் சிலர்.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது











Click it and Unblock the Notifications