அதிமுகவினர் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய கிராமத்தினர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே ஆயுதங்களுடன் சென்ற அதிமுகவினரின் வாகனங்கள் மீது கிராம மக்கள் கல் வீசித் தாக்குதல்நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடியைச் சேர்ந்த அதிமுக மாணவர் அணி செயலாளர் சுரேஷ் குமார், சமீபத்தில் திமுகவிலிருந்து விலகிஅதிமுகவில் சேர்ந்த கருணாநிதி உள்ளிட்ட அதிமுகவினர் கார்களில் விளாத்திகுளம் சென்றனர்.
கொடியங்குளம் பகுதியை அவர்களது வாகனங்கள் நெருங்கியபோது, காரில் பொருத்தியிருந்த மைக் மூலம்பிரசாரம் மேற்கொண்டனர். ஆனால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இங்கு பிரசாரம் மேற்கொள்ள வேண்டாம்என்று கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால் எதிர்ப்பை கண்டுகொள்ளாத அதிமுகவினர் தொடர்ந்து மைக் மூலம் பிரசாரம் செய்துள்ளனர். மேலும்,கார்களில் வைத்திருந்த உருட்டுக் கட்டைகள் போன்ற ஆயுதங்களையும் காட்டி கிராமத்தினரை மிரட்டியதாகத்தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதிமுகவினரின் கார்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் காரில்பொருத்தப்பட்டிருந்த மைக் உடைந்தது. 3 அதிமுகவினர் காயமடைந்தனர்.
தகவல் அறிந்ததும் போலீஸ் படை அங்கு விரைந்தது. பிரச்சினை பெரிதாகாமல் தடுக்கும் பொருட்டு போலீஸார்அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!










Click it and Unblock the Notifications