பாஜக, சோ வரவேற்பு
குலசேகரம்:
பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ள நடிகர் ரஜினியின் முடிவை வரவேற்பதாக அக்கட்சியின் அகில இந்தியப்பொதுச் செயலாளர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாமக போட்டியிடும் 6 தொகுதிகளில் அக் கட்சி வேட்பாளர்களைத் தோற்கடிக்க ரஜினி முடிவெடுத்துள்ளார்.மதுரையில் தனது ரசிகர்களின் மீதான தாக்குதலுக்குப் பின்னர் ரஜினி பாமகவினரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
நதிகள் இணைப்புத் திட்டத்தை மையமாக வைத்து அவர் பாஜகவிற்கு தனது ஆதரவையும் தெரிவித்துள்ளார்.இதனை நாங்கள் வரவேற்கிறோம்.
வைகோ வழக்கு தொடர்பாக பொடா மறு ஆய்வுக் குழு தனது முடிவைக் கூறியுள்ளது. அது ஆலோசனை கூறும் ஓர்அமைப்பு. அதுவே நீதிமன்றம் ஆகாது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, மதமாற்றத் தடைச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் எங்கள்கருத்தும், அதிமுகவின் கருத்தும் ஒன்றாகவே உள்ளது. முன்பு திமுகவோடு கூட்டணி அமைத்து செயல்பட்டதைவிடதற்போது அதிமுக கூட்டணி உடனான உறவு நன்றாக உள்ளது என்றார் இல. கணேசன்.
சோ கருத்து:
ரஜினியின் அறிவிப்பு குறித்து துக்ளக் ஆசிரியர் சோ கூறியதாவது:
ரஜினி தனது நிலையைத் தெளிவுபடுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் பற்றி ரஜினி சொன்ன கருத்துக்கள்மக்களை சிந்திக்க வைக்கும். நதிநீர் இணைப்பை அவர் தீவிரமாக ஆதரிக்கிறார். அதை பாஜக நிறைவேற்றும்என்பதால் அந்தக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ரஜினியின் முடிவால் திமுக கூட்டணிக்கு நிச்சயம் அதிகபாதிப்பு இருக்கும் என்றார்.
சு.சுவாமி கருத்து:
இது தொடர்பாக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி கூறியதாவது:
நதிகளை இணைக்கும் கட்சிக்குத் தான் ஓட்டு என்று ரஜினி என்று கூறியுள்ளார். அப்படியானால் அவர் எனதுகட்சிக்குத் தான் ஆதரவு அளித்திருக்க வேண்டும். ஏனென்றால், அந்தத் திட்டத்தை முதலில் அறிவித்தது நான்தான்என்றார்.
ரஜினியின் கருத்தை மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், தமிழக பாஜக பொதுச் செயலாளர் ராஜா ஆகியோர்வரவேற்றுள்ளனர்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications