கட்டப் பஞ்சாயத்துகளை தடை செய்ய அரசுக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரை
சென்னை:
கட்டப் பஞ்சாயத்துகளைத் தடை செய்ய அரசு முயற்சி செய்யும் என்று நம்புவதாக உயர் நீதிமன்ற நீதிபதிகற்பகவிநாயகம் கூறியுள்ளார்.
திருச்சி, வலையப்பட்டியை சேர்ந்த சாந்தி, தனது கணவர்,- மாமியார் கொடுமை தாங்காமல், விவாகரத்து கேட்டுதனது கணவர் ராஜேந்திரனுக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதனையடுத்து வலையப்பட்டி பஞ்சாயத்தில்ராஜேந்திரன் புகார் செய்தார்.
பஞ்சாயத்தார் சாந்திக்கு ரூ.50,000 அபராதம் விதித்ததோடு, பஞ்சாயத்தார் முன்பு பல முறை அவரைக் காலில் விழவைத்தனர். ஒவ்வொரு முறையும் காலில் விழுந்தபோது அபராத பணத்தைக் குறைத்து, இறுதியில் ரூ.19,058அபராதம் விதித்தனர். 2 குழந்தைகளையும் ராஜேந்திரனிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார்கள்.
இது குறித்து திருச்சி போலீசில் புகார் செய்தார். மேலும் சென்னை உயர் நீதிமன்றத்திலும் சாந்தி வழக்குத்தொடுத்தார். இதனையடுத்து முன் ஜாமீன் கோரி கணவர் ராஜேந்திரன் மற்றும் பஞ்சாயத்தைச் சேர்ந்த 12 பேர்கும்பலும் மனு செய்தனர்.
இந்த வழக்கில் சாந்திக்கு குடும்ப நல நீதிமன்றம் மூலம் விவாகரத்து தருவதாகவும், 2 குழந்தைகளுக்கும் மாதம்தலா ரூ. 2 ஆயிரம் ஜீவனாம்சம் கொடுக்கவும், குழந்தைகளின் மேல் படிப்புக்கு 30 சதவீதம் பணம் உயர்த்தித்தருவதாகவும் ராஜேந்திரன் ஒப்புக் கொண்டார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி கற்பக விநாயகம் கூறுகையில், கட்டப் பஞ்சாயத்தில் உள்ளாட்சி தலைவர்களும்,அரசு ஊழியர்களும் தலையிடக் கூடாது என்று தமிழக அரசு கூறியுள்ளது. கட்டப் பஞ்சாயத்தை ஒழிக்க தமிழகஅரசு ஒரு அவசர சட்டத்தை பிறப்பிக்கும் என்று நம்புகிறேன் என்றார்.
-
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications