மூர்த்தியின் கார் மீது கல்வீச்சு
சென்னை:
திருப்போரூர் அருகே பா.ம.க. வேட்பாளர் ஏ.கே. மூர்த்தியின் பிரச்சார அணிவகுப்பின் மீதுகல்வீச்சுத் தாக்குதல் நடந்தது.
செங்கல்பட்டு தொகுதியில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சரான மூர்த்தி, திமுக உள்ளிட்டகூட்டணிக் கட்சியினருடன் திருப்போரூர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
சந்தானம்பட்டு பகுதியில் இவர்களது கார்கள் சென்றபோது சிலர் கற்களை வீசித் தாக்கினர். இதில்ஏ.கே. மூர்த்தியின் கார் விநாடியில் தப்பிவிட, பின்னால் வந்த கார்களின் கண்ணாடிகள் உடைந்தன.அதில் இருந்த திமுகவினர் காயமடைந்தனர்.
இதையடுத்து போலீசில் மூர்த்தி புகார் தர, உடனடியாக அவரது பிரச்சாரத்துக்கு பாதுகாப்புவழங்கப்பட்டது.
இத் தாக்குதலை ரஜினி ரசிகர்கள் நடத்தினார்களா அல்லது வேறு யாராவது நடத்தினார்களா என்றுதெரியவில்லை.
ரஜினி மீது வழக்கு?
இதற்கிடையே ரஜினிக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரதிட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இது குறித்து பா.ம.க. வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் பாலு கூறியதாவது:
தனிப்பட்ட முறையில் ராமதாஸை ரஜினி தரக்குறைவாகத் தாக்கிப் பேசியுள்ளார். வன்முறையின்ராஜா என்றும் கூறியுள்ளார். மேலும் ராமதாஸால் தான் நல்லவர்கள் அரசியலுக்கு வரபயப்படுவதாகவும் கூறியிருக்கிறார்.
இது தேர்தல் ஆணையம் கூறிய அறிவுரைக்கு முரணானது. தனிப்பட்ட முறையில் அரசியல்தலைவர்களைத் தாக்கிப் பேசக் கூடாது என்று கூறியுள்ளது. ஆனால், பாஜகவுக்கு ஆதரவுதெரிவிப்பதற்காக ரஜினி, ராமதாஸை மிகவும் கொஞ்சையாக தாக்கிப் பேசியது தேர்தல் நடத்தைவிதிமுறைகளுக்கு எதிரானது.
இதனால் ராதாசின் புகழுக்கும் கட்சிக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து தேர்தல்ஆணையத்திடம் முறையிடுவோம். ராமதாசின் அனுமதி கிடைத்தவுடன் இது தொடர்பாகநீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்வோம் என்றார்.
-
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications