காங்கேயம் அதிமுக எம்எல்ஏவின் மருமகன் படுகொலை
ஈரோடு:
காங்கேயம் அதிமுக எம்எல்ஏ செல்வி முருகேசனின் மகளை காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர் மர்மமானமுறையில் இறந்து கிடந்தார்.
செல்வி முருகேசனின் உதவியாளராக இருந்தவர் தாராபுரத்தைச் சேர்ந்த சிவக்குமார் (25). இவருக்கும்என்ஜீனியரிங் 3ம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த, எம்.எல்.ஏவின் மகள் கவிதாவுக்கும் (22) இடையே காதல்மலர்ந்தது. இந்தக் காதலுக்கு எம்.எல்.ஏ வீட்டில் எதிர்ப்பு எழுந்தது.
எதிர்ப்பையும் மீறி கவிதாவை அவர் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பின் இவர்களுக்கு கொலைமிரட்டல் வந்தது. இது குறித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கும், காவல் துறை அதிகாரிகளுக்கும் புகார் தெரிவித்தும்மிரட்டல் தொடர்ந்தவண்ணம் இருந்ததால் கடந்த 1 வருடமாக இவர்கள் இருவரும் பெங்களூரில் வசித்து வந்தனர்.
இருவரும் ஒரு விடுதியில் தங்கி மேல் படிப்பு படித்து வந்ததாகத் தெரிகிறது. இந் நிலையில் இருவரும் விடுதியில்இருக்கும்போது, ஒரு கும்பல் மாருதி வேனில் வந்து கவிதாவின் கண் முன்னால் சிவக்குமாரைக் கடத்திச்சென்றுள்ளது.
ஓசூர் அருகே அத்திபட்டு என்ற இடத்தில் சிவக்குமார் தலையில் பாறாங்கல்லை போட்டு கொலை செய்த அக்கும்பல் உடலை அங்கேயே போட்டுவிட்டுத் தப்பியது.
இந் நிலையில் கணவர் கடத்தப்பட்டது குறித்து கவிதா தந்த புகாரின் அடிப்படையில் விசாரணையில் இறங்கியபெங்களூர் போலீசாருக்கு ஒசூர் பகுதியில் சிவக்குமாரின் உடல் கிடப்பது தெரியவந்தது.
சிவக்குமாரின் உடல் பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
கொலை தொடர்பாக தாராபுரத்தில் உள்ள சிவக்குமார் வீட்டிலும், எம்எல்ஏ செல்வி முருகேசனிடமும் தனிப்படைபோலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது











Click it and Unblock the Notifications