மக்களுக்காக தினம் 20 மணி நேரம் உழைக்கிறேன்: ஜெயலலிதா
தஞ்சாவூர்:
மக்களுக்காக தினமும் 20 மணி நேரம் உழைப்பதாக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
தஞ்சாவூர் அதிமுக வேட்பாளர் தங்கமுத்துவை ஆதரித்து அவர் பேசியதாவது:
உங்கள் அன்புச் சகோதரியான எனக்கு கடந்த தேர்தலில் அமோக ஆதரவளித்து முதலமைச்சர்ஆக்கினீர்கள். உங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி வருவதோடு,தமிழகத்தை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக மாற்றிக் கொண்டிருக்கிறேன்.
இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பது தான் இமயம் முதல் குமரி வரை இப்போது கேட்கப்படும்கேள்வி. 100 கோடி இதயங்களில் இருக்கும் வாஜ்பாய் பிரதமராக வேண்டுமா?. அரை வேக்காடுசோனியா பிரதமராக வேண்டுமா?
இந்தியாவில் பிறந்தவர் நாட்டை ஆள வேண்டுமா? விசுவாசமில்லாத சோனியா ஆள வேண்டுமா?மண்ணின் மைந்தர் வாஜ்பாய் தான் பிரதமராக வேண்டும்.
உங்களுக்காக நான் தினமும் 20 மணி நேரம் உழைக்கிறேன். தமிழகத்தை முதன் மாநிலமாகஆக்குவதற்கு அடுத்து என்ன செய்யலாம் என்பதே எப்போதும் என் சிந்தனையாக உள்ளது என்றார்.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!











Click it and Unblock the Notifications