தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் சீட்களை அதிகரிக்கத் திட்டம்
சென்னை:
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்புக்கான இடங்களை அதிகரிக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து எம்.ஜி.ஆர். மருத்து பல்கலைக்கழக துணைவேந்தர் பிரமானந்தம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக மருத்துவக் கல்லூரிகளில் இப்போது 1,550 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. கன்னியாகுமரி, வேலூர்,தேனி ஆகிய இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இந்த 3கல்லூரிகளிலும் தலா 100 இடங்களை ஏற்படுத்தித் தரும்படி இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு கோரிக்கைவிடுத்துள்ளோம்.
திருச்சி கி,ஆ.பெ. மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 50 இடங்களை ஏற்படுத்தித் தரும்படியும் கேட்டுள்ளோம்.இந்திய மருத்துக் கவுன்சிலின் அனுமதி கிடைத்ததும் இடங்கள் எண்ணிக்கை உயர்த்தப்படும்.
இந்திய மருத்துக் கவுன்சில் கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரியை ஆய்வு செய்து விட்டது. வேலூர், தேனிகல்லூரிகளை தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.
நான்கரை ஆண்டுகளாக இருக்கும் மருத்துவப் படிப்பை 5 ஆண்டுகளாக மாற்றவும் ஆலோசித்து வருகிறோம்என்றார்.


Click it and Unblock the Notifications
