பழனிக்கு நேரம் சரியில்லை!
பழனி:
இழுவை ரயில் பெட்டி கழன்று விழுந்து 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில் மேலும் ஒரு அசம்பாவிதம் பழனிமலைக் கோவிலில் நிகழ்ந்துள்ளது. மலை உச்சியில் கட்டப்பட்டிருந்த 25 கிலோ எடையுள்ள கோவில் மணியின்இரும்புக் கயிறு அறுந்து மணி கழன்று விழுந்தது.
பழனி முருகன் கோவிலின் உச்சியை அடைய அடிவாரத்திலிருந்து மலைக்கு இழுவை ரயில்கள்இயக்கப்படுகின்றன. இந்த இழுவை ரயிலின் ஒரு பெட்டி சமீபத்தில் அறுந்து விழுந்தது. இதில் 32 பேர்காயமடைந்தனர்.
இந்த சம்பவம் நடந்து முடிந்த கையோடு மேலும் ஒரு சம்பவம் நடந்து பக்தர்கள் மனதில் பீதியைஏற்படுத்தியுள்ளது. மலைக் கோவிலின் உச்சியில் பிரமாண்டமான மணி கட்டப்பட்டுள்ளது. இந்த மணி 25 கிலோஎடையுள்ள இரும்புக் கயிறு மூலம் தொங்க விடப்பட்டுள்ளது.
தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று கோவில் மணி காலை முதலே ஒலித்துக் கொண்டிருந்தது. இந் நிலையில் திடீரென்றுஇரும்புக் கயிறு அறுந்ததால், கோவில் மணி அப்படியே விழுந்தது. இருப்பினும் கோவில் மணி இருந்த இடத்தில்,பாதுகாப்பு கேட் இருந்ததால் மணி வெளியே வரவில்லை.
அடுத்தடுத்து இரண்டு அசம்பாவித சம்பவங்கள் நடந்துள்ளது பழனி கோவில் பக்தர்களின் மனதில் கிலேசத்தைஉண்டாக்கியுள்ளது. என்ன நடக்கப் போகிறதோ என்ற அச்சம் அவர்களிடையே ஏற்பட்டுள்ளது.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications