தேர்தல் வரை மகளிர் சுய உதவிக் குழு கூட்டங்களுக்கு தடை: தேர்தல் ஆணையர்
சென்னை:
தேர்தல் முடியும் வரை மகளிர் சுய உதவிக் குழு கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய தேர்தல்ஆணையர் கோபாலசாமி கூறினார்.
தலைமைச் செயலகத்தில் நடந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கூட்டத்துக்குப் பின்செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
காங்கிரஸ் தவைர் சோனியா காந்தியின் பதிபக்தி பற்றி முதல்வர் ஜெயலலிதா பிரசாரம் செய்வதாக எதிர்க்கட்சிகள்புகார் தெரிவித்துள்ளன. பதிபக்தி போன்ற விஷயங்களுக்கு என்ன அளவுகோல்? எனவே இதுபோன்ற தனிநபர்தாக்குதல் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க இயலாது. வேண்டுமானால் பாதிக்கப்பட்டவர் அவதூறுவழக்குத் தொடரலாம்.
உடல்ரீதீயான தாக்குதல் என்றால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கலாம். பொதுவாக அரசியல் கட்சிகள்செய்யும் பிரசாரத்தின் தரம் உயர வேண்டும். தமிழகத்தில் அது குறைவாக இருக்கிறது.
மகளிர் சுய உதவிக் குழுக்களை ஆளும் கட்சியினர் தங்கள் தேர்தல் பிரசாரங்களுக்குப் பயன்படுத்திக் கொள்வதாகஆணையத்த்திடம் எதிர்க்கட்சிகள் புகார் தந்தன. இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கவும், தேர்தல்முடியும்வரை மகளிர் சுய உதவிக் குழுக்களின் கூட்டங்களை நடத்தக்கூடாது எனவும் மாவட்ட ஆட்சியர்களுக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வாக்காளர் அடையாள அட்டை 70 சதவீதம் பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர்அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ள மற்ற 14 வகை சான்றுகளைக் காட்டி வாக்களிக்கவகை செய்வது பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
திமுக தலைவர் கருணாநிதியின் கூட்டங்களுக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
வேட்பாளர்களிடம் திமுக பணம் வாங்கியது தொடர்பான புகார்களுக்கு ஆதாரங்களைத் தரும்படிகோரியிருக்கிறோம்.
ரஜினி ரசிகர்கள் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து பாரபட்சமின்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கஉத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் தொடர்பாக விசாரித்து தேர்தல் ஆணையத்துக்கு மூன்றுநாள்களுக்குள் அறிக்கை அனுப்ப சென்னை ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் கோபாலசாமி.
இதற்கிடையே தனியார் மற்றும் கேபிள் டிவிக்களில் தேர்தல் விளம்பரம் செய்வதற்கு அனுமதி அளிக்க இணைத்தலைமை தேர்தல் அதிகாரி குமார் ஜெயந்த் தலைமையில் மூவர் குழுவையும், இக் குழுவின் முடிவை எதிர்த்துகொடுக்கப்படும் புகார்களை விசாரிக்க தலைமைத் தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி தலைமையில்மற்றொரு மூவர் குழுவையும் தமிழக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
-
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications