புதுக்கோட்டை பிரசாரம்: பாஜகவுக்கு "கட்" சொன்ன ஜெ!
புதுக்கோட்டை:
ஜெயலலிதாவின் புதுக்கோட்டை பிரசாரத்தின்போது பாஜகவினர் புறக்கணிக்கப்பட்டனர். அவர்களுக்குகூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு கூட அனுப்பப்படவில்லை.
புதுக்கோட்டை தொகுதியை பாஜகவுக்கு (மத்திய அமைச்சர் திருநாவுக்கரரசருக்கு) தர முடியாது என்று ஜெயலலிதாமறுத்து விட்டதால், திருநாவுக்கரசரின் ஆதரவாளர்கள் கடுப்பில் உள்ளனர். திமுக வேட்பாளர் ரகுபதிக்குஆதரவாக அவர்கள் மறைகமாக செயல்பட்டு வருகிறார்கள்.
தொகுதியில் பாஜகவினர் யாரும் வேலை செய்யாமல் அமைதியாக இருக்கிறார்கள். அவர்களை அணுகி ஆதரவுகேட்கவும் அதிமுக வேட்பாளர் அஞ்சுகிறார். உதவி கேட்கப் போய் அம்மாவின் வெறுப்பை சம்பாதித்துக் கொள்ளஅவர்கள் விரும்பவில்லை.
இந் நிலையில், புதுக்கோட்டையில் ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டார். இந்தக் கூட்டத்திற்கு பாஜகவினர்யாரும் அழைக்கப்படவில்லை. அதிமுக மட்டுமே இந்த பொதுக் கூட்டத்தில் ஆதிக்கம் செலுத்தியது.
இது குறித்து புதுக்கோட்டை தொகுதிக்குட்பட்ட நகராட்சி தலைவர் திவ்யநாதன் கூறுகையில், திருநாவுக்கரசர்தலைமையில் பாஜகவில் இணைந்த எம்.ஜி.ஆர். விசுவாசிகளை அதிமுக தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.
புதுக்கோட்டை பிரசாரத்திற்கும் பாஜகவினர் யாரும் அழைக்கப்படவில்லை, பிரசாரப் பணிகளிலும் பாஜகவைஈடுபடுத்தாமல் தள்ளியே வைத்துள்ளது அதிமுக என்றார்.
அதிமுகவின் தொடர் புறக்கணிப்பையடுத்து பாஜகவினர் தங்களது சொந்த வேலைகளில் ஈடுபடத்தொடங்கியுள்ளனர். இதனால் துணைக்கு ஆள் இல்லாமல் ஒத்தையாக அதிமுக வேட்பாளர் பிரசாரத்தில்ஈடுபட்டுள்ளார். மாறாக, திமுக வேட்பாளர் ரகுபதியோ கூட்டணிக் கட்சிகள் புடை சூழ ராஜா போல பிரசாரத்தில்ஈடுபட்டுள்ளார்.
-
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications