வன்னியர் சங்க தலைவர்களுடன் ரஜினி திடீர் ஆலோசனை
சென்னை:
பாமகவைத் தோற்கடிப்பது குறித்து ராமதாசுக்கு எதிரான வன்னியர் சங்கங்களின் தலைவர்களுடன் நடிகர்ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தினார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவும் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக சமீபத்தில்பத்திரிக்கையாளர்களிடம் கூறினார் ரஜினிகாந்த். இந் நிலையில் தேவைப்பட்டால் மீண்டும்பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து உரையாடுவேன் என்று திடீரென்று ரஜினி கூறியுள்ளார்.
ரஜினியின் இந்த திடீர் அறிவிப்பின் பின்னணி குறித்து விசாரிக்கையில் சில சுவாரசியமான தகவல்கள் கிடைத்தன.ரஜினியின் வாய்ஸ்க்கு மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்று ரஜினிக்குநெருக்கமான வட்டாரத்தில் பேசப்படுகிறது. இது ரஜினியின் காதுக்கும் போயுள்ளது.
நெத்தி அடியாக முடிவெடுக்க முடியாமல், தானும் குழம்பி தனது ரசிகர்களையும் விரக்தியில் ஆழ்த்தும் விதமாகவேரஜினியின் நடவடிக்கை உள்ளதாக பொதுமக்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது.
எனவே பாஜகவுக்கு ஆதரவு, அதிமுகவுக்கு மறைமுக ஆதரவு என்பதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றுரஜினிக்கு அவருக்கு நெருங்கிய பத்திரிக்கையாளர் அறிவுறுத்தியுள்ளார். இதைச் சரிக்கட்ட வேண்டும் என்றால்நேரடியாக பிரசாரக் களத்தில் குதிப்பதுதான் உங்களது எதிர்காலத்திற்கு நல்லது என்றும் ரஜினிக்குஅறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ரஜினி தீவிரமாக பரிசீலித்து வருகிறார்.
இந் நிலையில் வன்னியர் சங்க தலைவர் ஏ.கே.நடராஜன், வன்னியர் அமைப்பு நடத்தும் தீரன், சமீபத்தில்பா.ஜ.கவில் இணைந்த வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் ராம சுகந்தன், வன்னிய இனப் பிரமுகரான இளவழகன்உள்ளிட்ட 7 பேரை இன்று காலை ரஜினி திடீரென அவரது போயஸ் தோட்ட இல்லத்திற்கு வரவழைத்துஆலோசித்தார்.
சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் ஏ.கே.நடராஜன், தீரன் ஆகியோர்கூறியதாவது:
ரஜினியின் அழைப்பின் பேரில்தான் நாங்கள் வந்தோம். தேர்தலில் ராமதாசை வீழ்த்துவது குறித்து நாங்கள்பேசினோம். வன்னியர் சமூகத்தின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக தன்னைக் காட்டி வரும் ராமதாசின் முகத்திரையைக்கிழித்தெறிவோம்.
ராமதாசை எதிர்த்து நாங்கள் பிரசாரம் செய்யும்போது ரஜினி ரசிகர்களும் கலந்து கொள்வார்கள். தானேபிரசாரத்துக்கு வருவது பற்றி ரஜினி ஏதும் பேசவில்லை. தேவைப்பட்டால் அடுத்த முறை எங்களை சந்திப்பதாகக்கூறி இருக்கிறார் என்றனர்.
இதற்கிடையே, புதுவையைச் சேர்ந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள் நாளை ரஜினியை சந்திக்கிறார்கள். இதைத்தொடர்ந்து பாமக போட்டியிடும் 6 தொகுதிகளைச் சேர்ந்த மற்ற நிர்வாகிகளும் ரஜினியை சந்திக்கிறார்கள்.
இவர்களைப் பார்த்து முடித்து விட்ட பிறகு பிற மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளையும் ரஜினி சந்தித்துப்பேசவுள்ளார். இதன் பிறகு பாமகவுக்கு எதிராக தேர்தல் பிரசாரம் செய்வது குறித்து ரஜினி முடிவு செய்வார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, புதுவையில் ரஜினியை எப்படியாவது பிரசாரத்திற்குக் கூட்டி வந்து விட வேண்டும் என்றுபாஜகவினர் பிரம்மப் பிரயத்தனம் செய்து வருகிறார்கள். அதேபோல, சென்னையில் வாஜ்பாய் பிரசாரம்மேற்கொள்ளும்போது ரஜினியையும் உடன் அழைத்து வரவும் முயற்சி நடக்கிறது. வாஜ்பாயை டெல்லியில் ரஜினிசந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
ஆனால் ஜெயலலிதாவும், உடன் இருக்கையில் அவருடன் எப்படி மேடையில் தோன்றுவது என்று ரஜினி தரப்புசங்கடத்தைத் தெரிவித்துள்ளதாம். கூடிய விரைவில் ரஜினியிடம் இருந்து ஏதாவது புதிய அதிரடி வெளியாகலாம்.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications