வாஜ்பாயின் கர்நாடக பேச்சு: ஜெவுக்கு ராமதாஸ் கேள்வி
சென்னை:
காவிரிப் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்க்க வேண்டும் என்று கர்நாடகத்தில் நடந்த தேர்தல்பிரசாரத்தின்போது பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளதற்கு ஜெயலலிதா என்ன கருத்துக் கூற விரும்புகிறார் என்றுபாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், கர்நாடகத்தில் நடந்த பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்,வாஜ்பாய் பேசுகையில், காவிரிப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே சிறந்த தீர்வு காண முடியும் என்றுகூறியுள்ளார்.
ஆனால் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறி வருகிறார். வாஜ்பாயுடன்கூட்டணி வைத்துள்ள ஜெயலலிதா, கர்நாடகத்தில் வாஜ்பாய் பேசியுள்ளது குறித்து என்ன கூற விரும்புகிறார்என்பதை அறிய விரும்புகிறேன்.
காவிரி நடுவர் மன்றத்தையேக் கலைத்து விட வேண்டும் என்று கூறியவர் ஜெயலலிதா. இப்போது உச்ச நீதிமன்றம்வரை அவர் சென்றுள்ளார். ஆனால் பேச்சுதான் பிரச்சினைக்குத் தீர்வு என்று வாஜ்பாய் கூறுகிறார். இதற்குஜெயலலிதா என்ன பதில் சொல்லப்போகிறார்?
மே 5ம் தேதி ஜெயலலிதாவும், வாஜ்பாயும் சென்னையில் ஒரே மேடையில் பேசப் போகிறார்கள். அப்போதுவாஜ்பாய் பேசியது தவறு என்று ஜெயலலிதாவால் மறுத்துப் பேச முடியுமா? அந்த தைரியம் அவருக்கு உள்ளதா?அல்லது தனது பேச்சை வாபஸ் வாங்கினால்தான் கூட்டத்திற்கு வர முடியும் என்று பாஜகவினரிடத்தில்ஜெயலலிதாவால் சொல்லத்தான் முடியுமா? என்று கேட்டுள்ளார் ராமதாஸ்.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications