நூறு ஜெயலலிதா வந்தாலும் பாலுவை தோற்கடிக்க முடியாது: ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நூறு ஜெயலலிதா வந்தாலும் டி.ஆர். பாலுவை தோற்கடிக்க முடியாது என திமுக துணைப் பொதுச்செயலாளர் ஸ்டாலின் கூறினார்.

தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர். பாலுவை ஆதரித்து இன்று வேளச்சேரிபகுதியில் நடந்த கூட்டத்தில் ஸ்டாலின் கூறியதாவது:

இந்த வெயில் கொடுமையைக் கூட பொருட்படுத்தாமல் இப்படி ஏராளமான மக்கள் இங்கேதிரண்டிருக்கிறீர்கள். ஜெயலலிதாவின் ஆட்சியின் கொடுமைகளைவிட இந்த வெயிலின் கொடுமைஉங்களுக்குப் பெரிதாகத் தெரியவில்லை என்று நினைக்கிறேன்.

நல்ல தீர்ப்பு வழங்க மக்கள் தயாராகிவிட்டதை உணர முடிகிறது. 40 இடங்களிலும் வெல்லப்போகிறோம்.

டி.ஆர். பாலுவைத் தோற்கடித்த ஜெயலலிதா பிரம்மப் பிரயத்தனங்கள் செய்து வருகிறார். ஒருஜெயலலிதா அல்ல.. நூறு ஜெயலலிதா வந்தாலும் பாலுவை தோற்கடிக்க முடியாது.

சென்னையில் மட்டும் இந்த அம்மையார் 3 நாட்கள் வீதி வீதியாய் சுற்றி வந்தார். எந்தத் தேர்தலிலும்ஜெயலலிதா இந்த சுத்து சுத்தியது கிடையாது. பயந்து போய் கிடக்கிறார் என்பது புரிகிறது.

புதிய வீராணம் என்ற வேட்டியான ஒரு திட்டத்தை தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா கையில் எடுத்து,இதோ வரப் போகுது தண்ணீ.. அதோ வரப் போகிறது தண்ணீ என்று மக்களுக்குத் தண்ணி காட்டிக்கொண்டிருக்கிறார்.

இந்தத் திட்டத்தால் சென்னைக்கு குடிநீர் கிடைத்தால் ஜெயலலிதாவுக்கு திமுகவே பெரியபாராடாட்டு விழா எடுக்கும் என்பதை சொல்லிக் கொள்கிறேன். இந்தத் திட்டத்தின் மூலம் பணத்தைக்கொள்ளைடிப்பது மட்டுமே ஜெயலலிதா திட்டம்.

கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை நிறைவேற்ற வந்த ரஷ்ய நிறுவனத்திடம் 50 கோடி லஞ்சம்கேட்டார் இந்த அம்மையார். இதனால் அந்த விவகாரம் இப்போது நீதிமன்றத்தில் இருக்கிறது.இப்படி எதிலும் ஊழல், எப்போதும் ஊழல். இது தான் ஜெயலலிதா.

இந்த ஜெயலலிதா என்ன செய்தாலும் டி.ஆர்.பாலுவின் வெற்றியைத் தடுத்திடவே முடியாது என்றார்ஸ்டாலின்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+