திமுகவை டென்சனாக்கும் காங்கிரஸ் சுவரொட்டிகள் !!
திருநெல்வேலி:
திருநெல்வேலியில், காங்கிரஸார் ஒட்டியுள்ள சுவரொட்டிகளால் திமுகவினர் உச்சகட்ட டென்சனில் உள்ளனர்.
திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சியினடையே கடும் மோதல் ஏற்பட்டது.
தொழிலதிபர் வசந்தகுமாரும், ஏற்கனவே மத்திய அமைச்சர் பொறுப்பை வகித்துள்ள தனுஷ்கோடி ஆதித்தனும் கடுமையாகமோதினர். இதில் வாசனின் சிபாரிசுடன் ஆதித்தனுக்கு ஒரு வழியாக சீட் கிடைத்துவிட்டது.
இதனால் வசந்த குமார் ஆதரவாளர்கள் கோபமடைந்துள்ளனர். திருநெல்வேலி, சென்னையில் அவர்கள் ஆர்ப்பாட்டம்,கொடும்பாவி எரிப்பு போன்ற போராட்டங்களை நடத்தினர்.
இந் நிலையில், நெல்லையில் ஒட்டப்பட்ட காங்கிரஸ் சுவரொட்டிகள் அப்பகுதி திமுகவினரின் பி.பியை உயர்த்தியுள்ளது.
கருணாநிதியின் சதியை முறியடித்து தனுஷ்கோடி ஆதித்தனுக்கு சீட் வாங்கிய வருங்கால முதல்வர் வாசனுக்கு நன்றி என்கின்றன அந்த போஸ்டர்கள்.
காங்கிரஸ் பேரவை என்ற பெயரில், பல வண்ணத்தில் மெகா சைசில், பிரமாண்டமாக அடிக்கப்பட்டுள்ள அந்த சுவரொட்டிகள்நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக திமுகவினர் போலீஸில் புகார் கூறியுள்ளனர். இதையடுத்து போலீஸாரும் ஒப்புக்கு ஒரு வழக்கைப் பதிவுசெய்துள்ளனர்.
சுவரொட்டிகளின் பின்னணியில் உள்ளவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் குதிப்போம்என்கின்றனர் திமுகவினர்.
இந் நிலையில் திமுக-காங்கிரஸ் இடையே மோதலை ஏற்படுத்த இந்த போஸ்டர்களை அதிமுகவினர் தான் ஒட்டியுள்ளனர் எனவேட்பாளரான தனுஷ்கோடி ஆதித்தன் குற்றம் சாட்டியுள்ளார். கருணாநிதியை இன்று காலை சென்னையில் சந்தித்துப் பேசியஅவர், போஸ்டர் விவகாரத்தில் அதிமுகவினரின் பின்னணி குறித்து விளக்கிவிட்டுச் சென்றார்.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications