யார் சனியன்?: ஜெயலலிதா மீது இளங்கோவன் கடும் தாக்கு
அந்தியூர்:
ஜெயலலிதாவுக்கு தோல்வியை பரிசாகத் தருவேன் என்று கோபிச்செட்டிப்பாளையம் காங்கிரஸ் வேட்பாளர்இளங்கோவன் கூறினார்.
திமுக கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் கூட்டம் பவானி-மேட்டூர் சாலையில் உள்ள பழனியப்பா திருமணமண்டபத்தில் நடந்தது. அதில் பேசிய இளங்கோவன், ஜெயலலிதாவை ஒருமையில் பேசினார்.
அவர் கூறியதாவது:
இந்தியாவில் பல்வேறு பிரதமர்களை உருவாக்கிய முத்தமிழ் அறிஞர் கருணாநிதியை சனியன் என்றுசொல்லியிருக்கிறார் கேடுகெட்ட ஜெயலலிதா.
உண்மையில் சனியன் ஜெயலலிதா தான். சாலைப் பணியாளர்கள், தொழிலாளர்கள், ரேசன் கார்டுகளை இழந்தஏழைகள், அரசு ஊழியர்கள், மின்சாரம்- தண்ணீர் இல்லாம் அவதிப்படும் விவசாயிகள், கஞ்சித் தொட்டிகளைஅண்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட நெசவாளர்கள் என அனைத்துத் தரப்பினரையும் பிடித்துள்ள சனியன் நீ(ஜெயலலிதா).
உன்னை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர்.
நான் வெற்றி பெற்றாலும் தோற்றாலும் எனக்குக் கவலையில்லை. நான்பாட்டுக்கு உனக்கு எதிராக அரசியல்பண்ணிக்கிட்டு இருப்பேன்.
ஆனால், என் மீது தனிப்பட்ட வன்மம் கொண்ட ஜெயலலிதா என்னைத் தோற்கடிப்பதற்காக சத்தியமங்கலத்தில்இரண்டு நாள் டேரா போட்டு கோடி, கோடியாய் பணத்தைக் கொட்டி, கூட்டம் கூட்டி, அவர்களிடம் வெற்றி தேடித்தருமாறு கத்திவிட்டுப் போயிருக்கிறார்.
நான் தோற்றால் அது என் தனிப்பட்ட தோல்வி. அதே போல இங்கே அதிமுக வேட்பாளர் தோற்றால் அதுஜெயலலிதாவுக்கு ஏற்படும் தனிப்பட்ட தோல்வியாகவே அமையும்.
அந்தத் தோல்வியை மக்களுடன் சேர்ந்து நான் ஜெயலலிதாவுக்கு பரிசாகத் தருவேன் என்றார்.
-
எம்ஜிஆர் பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு வெள்ளி வாள் வழங்கி தரிசனம் -
“சாக்கு போக்கு சொல்லக்கூடாது”.. விஜய் பிறந்தநாளையொட்டி தவெக தொண்டர்களுக்கு அமைச்சர் ஆனந்த் அட்வைஸ்! -
Z பாதுகாப்பை கூட நம்ப மாட்டார்? விஜய் நம்பும் ஒரே ஆள் நயீம் மூஸா! முதல்வரின் இடது கை! யார் இவர்? -
விஜயதரணியின் அடுத்த "ஜம்ப்".. விளவங்கோடு டூ தவெக மாஸ்டர் ஸ்கெட்ச்! காங்கிரஸ் எப்படி ஹேண்டில் பண்ணும் -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு அப்போ பவரே இல்லையா.. வழக்கு போட முடியாது! விசாரிக்கவும் முடியாதாம்! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: மீண்டும் சூடுபிடிக்கும் சிபிஐ விசாரணை.. 10 போலீசாருக்கு சம்மன் -
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்!












Click it and Unblock the Notifications